MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Syamantha : ஜீ தமிழ் சீரியல் நடிகரை காதலித்து கரம்பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகை ஷியாமந்தா...!

Syamantha : ஜீ தமிழ் சீரியல் நடிகரை காதலித்து கரம்பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகை ஷியாமந்தா...!

Syamantha Kiran weds Anand Selvan : ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அயலில் சீரியலில் நடித்து வரும் ஆனந்த் செல்வனும், விஜய் டிவி சீரியல் நடிகை ஷியாமந்தா கிரணும் காதலித்து கல்யாணம் செய்துள்ளனர்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 18 2026, 01:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Syamantha Kiran weds Anand Selvan
Image Credit : instagram

Syamantha Kiran weds Anand Selvan

சின்னத்திரை ஜோடிகள் காதலித்து திருமணம் செய்துகொள்வது தற்போது தொடர்கதை ஆகி வருகிறது. சின்னத்திரை சீரியல்களில் நடித்த ரீல் ஜோடிகளே, பின்னாளில் ரியல் ஜோடிகளாக மாறி இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, வெவ்வேறு சீரியல்களில் நடித்தவர்கள் காதலித்து திருமணம் செய்த சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. அப்படி ஒரு திருமணம் தான் தற்போது நடைபெற்றுள்ளது. ஜீ தமிழ் சீரியலில் நடித்து வரும் நடிகர் ஒருவர், விஜய் டிவி சீரியலில் நடிக்கும் நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஷியாமந்தா கிரண் - ஆனந்த் செல்வன் கல்யாணம்
Image Credit : instagram

ஷியாமந்தா கிரண் - ஆனந்த் செல்வன் கல்யாணம்

அந்த ஜோடி வேறுயாருமில்லை, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அயலி சீரியல் நடிகர் ஆனந்த் செல்வன் மற்றும் விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள ஒண்ணா இருக்க கத்துக்கணும் தொடர் நடிகை ஷியாமந்தா கிரண் ஆகியோர் தான். இவர்கள் இருவரும் இதற்கு முன்னர் விஜய் டிவியில் கடந்த 2019-ம் ஆண்டு ஒளிபரப்பான ஆயுத எழுத்து என்கிற சீரியலில் இணைந்து நடித்திருக்கிறார்கள். அந்த சீரியலில் ஆனந்த் செல்வன் ஹீரோவாக நடித்திருந்தார். அதே சீரியலில் கோதை என்கிற துணை நடிகை கதாபாத்திரத்தில் ஷியாமந்தா நடித்திருந்தார்.

Related Articles

Related image1
ரோகிணியால் தடுத்து நிறுத்தப்பட்ட மனோஜின் திருமணம்... வசமாக சிக்கிய விஜயா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Related image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
34
காதல் டூ கல்யாணம்
Image Credit : instagram

காதல் டூ கல்யாணம்

அந்த சீரியலில் நடித்த போது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது. சுமார் 7 ஆண்டுகள் காதலுக்கு பின்னர் இன்று இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்களின் திருமணம் இன்று கோவையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். சீரியல் நட்சத்திரங்களான பிக்பாஸ் பவித்ரா, பாக்கியலட்சுமி பிரபலம் ரித்திகா உள்பட ஏராளமான பிரபலங்களும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

44
வயசு வித்தியாசம்
Image Credit : instagram

வயசு வித்தியாசம்

நடிகை ஷியாமந்தா கிரணுக்கு தற்போது 38 வயது ஆகிறது. ஆனால் இவரின் கணவர் ஆனந்த் செல்வனுக்கு 31 வயது தான் ஆகிறது. ஆனந்த் செல்வனை விட ஷியாமந்தா 7 வயது மூத்தவர் என கூறப்படுகிறது. காதலுக்கு வயது ஒரு தடை இல்லை என்பதை இந்த ஜோடி நிரூபித்துள்ளது. இவர்கள் இருவருக்கும் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ளது. ஷியாமந்தா நடித்துள்ள ஒண்ணா இருக்க கத்துக்கணும் என்கிற புத்தம் புதிய மெகா தொடர் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal : ஜனனியை கொல்லத்துடிக்கும் இராவணன்... ஆதி குணசேகரனுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி..!
Recommended image2
Siragadikka Aasai : விஜயாவை வீடுதேடி வந்து மிரட்டும் சிந்தாமணி... ரேகாவின் வாக்குமூலத்தால் காத்திருக்கும் ட்விஸ்ட்
Recommended image3
Siragadikka Aasai : ரேகாவை ஸ்கெட்ச் போட்டு கடத்திய முத்து... சத்யாவின் காதலுக்கு வேட்டு வைக்க காத்திருக்கும் சிந்தாமணி..!
Related Stories
Recommended image1
ரோகிணியால் தடுத்து நிறுத்தப்பட்ட மனோஜின் திருமணம்... வசமாக சிக்கிய விஜயா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved