MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Karuppu : சூர்யாவின் கருப்பு படத்தை கட்டாயம் பார்க்கத் தூண்டும் டாப் 5 காரணங்கள் என்னென்ன?

Karuppu : சூர்யாவின் கருப்பு படத்தை கட்டாயம் பார்க்கத் தூண்டும் டாப் 5 காரணங்கள் என்னென்ன?

Top 5 reasons to watch Karuppu : ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள மாஸ் திரைப்படமான கருப்பு படத்தை கட்டாயம் பார்க்கத் தூண்டும் ஐந்து காரணங்கள் பற்றி இங்கே பார்க்கலாம். 

2 Min read
Author : Ganesh A
Published : May 13 2026, 09:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Top 5 reasons to watch Karuppu Movie
Image Credit : X

Top 5 reasons to watch Karuppu Movie

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் சூர்யா நடித்த கருப்பு திரைப்படமும் ஒன்று. கடந்த ஆண்டு ரிலீஸ் ஆக இருந்த இப்படம் தற்போது ஒரு வழியாக மே 14ஆம் தேதி திரைகாண உள்ளது. கருப்பு திரைப்படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு மியூசிக் சென்சேஷன் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ், சிவதா, நட்டி நட்ராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை நாம் கட்டாயம் பார்க்க தூண்டும் ஐந்து காரணங்கள் பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
சூர்யா கம்பேக்
Image Credit : X

சூர்யா கம்பேக்

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளிவந்த படங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக தோல்வியை தழுவின. இதனால் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளார் சூர்யா. அவரின் ரசிகர்களும் அந்த பிரம்மாண்ட வெற்றிக்காக தான் காத்திருக்கிறார்கள். அந்த வெற்றியை கருப்பு திரைப்படம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அதன் ட்ரெய்லரிலேயே இப்படம் சூர்யா ரசிகர்களுக்கு மட்டுமின்றி பேமிலி ஆடியன்ஸுக்கும் செம டிரீட் ஆக இருக்கும் என்பது தெளிவாகத் தெரிந்தது. 

Related Articles

Related image1
Karuppu: கருப்பு படத்தின் முதல் விமர்சனத்தால் ஆடிப்போன கோலிவுட்! சத்தமில்லாமல் தயாரான தரமான சம்பவம்!
Related image2
Karuppu : சூர்யா முதல் த்ரிஷா வரை... கருப்பு படத்தில் நடிக்க வாரி வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?
36
சூர்யா - திரிஷா ஜோடி
Image Credit : X

சூர்யா - திரிஷா ஜோடி

கருப்பு திரைப்படம் மூலம் நடிகர் சூர்யாவும் நடிகை திரிஷாவும் நீண்ட இடைவெளிக்குப்பின் ஜோடி சேர்ந்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் இதுவரை மௌனம் பேசியதே, ஆயுத எழுத்து, ஆறு போன்ற படங்கள் வந்தன. கடைசியாக 2005 ஆம் ஆண்டு வெளிவந்த ஆறு திரைப்படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். அதன் பிறகு 21 ஆண்டுகள் கழித்து அவர்கள் இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் இது என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்துள்ளது. 

46
ஆர் ஜே பாலாஜி வில்லன்
Image Credit : X

ஆர் ஜே பாலாஜி வில்லன்

கருப்பு திரைப்படத்தை பார்க்கத் தூண்டுவதற்கான மற்றொரு முக்கிய காரணம் ஆர்.ஜே பாலாஜி. அவர் இயக்கத்தில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் இது ஆகும். இப்படத்தில் சூர்யாவை எந்த அளவு மாஸாக காட்டியிருக்கிறார் என்பது ஒருபுறம் இருந்தாலும், இதில் ஆர் ஜே பாலாஜியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுவும் இதுவரை எந்த ஒரு படத்திலும் இல்லாத வகையில் இப்படத்தில் வில்லனாக களமிறங்கி இருக்கிறார் ஆர் ஜே பாலாஜி. வில்லனாக அவரது நடிப்பு எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். 

56
சாய் அபயங்கர் இசை
Image Credit : Special Arrangement

சாய் அபயங்கர் இசை

கருப்பு படத்தை பார்க்கத் தூண்டும் மற்றொரு முக்கிய காரணம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தான். ஏனெனில் அவர் இசையமைப்பாளராக கமிட்டான முதல் படம் இதுவாகும். கருப்பு திரைப்படத்திற்கு முதலில் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருந்தார். அவர் சில காரணங்களால் இப்படத்திலிருந்து விலகியதை அடுத்து அவருக்கு பதில் சாய் அபயங்கரை இசையமைப்பாளராக கமிட் செய்தனர். அவரின் இசை இப்படத்திற்கு எந்த அளவுக்கு பிளஸ் ஆக அமையும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

66
நட்சத்திர பட்டாளம்
Image Credit : X

நட்சத்திர பட்டாளம்

கருப்பு திரைப்படத்தில் சூர்யா திரிஷா மட்டும் இன்றி பல அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான நடிகர் நடிகைகளும் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக பிரபல மலையாள நடிகர் இந்திரன்ஸ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் லப்பர் பந்து பட நடிகை சுவாசிகா, நெடுஞ்சாலை பட நாயகி சிவதா மற்றும் பிரபல வில்லன் நடிகர் ஆன நட்டி நட்ராஜ் ஆகியோரும் நடித்துள்ளதால் அவர்களின் நடிப்பும் இப்படத்திற்கு பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா
திரிஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Sunny Leone Net Worth | அடேங்கப்பா கிளாமர் குயின் சன்னி லியோன் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Recommended image2
Now Playing
CM Vijay : நடிகராக 275 கோடி சம்பளம் வாங்கிய விஜய்; முதல்வராக வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Recommended image3
Sunny Leone Net Worth: அடேங்கப்பா கிளாமர் குயின் சன்னி லியோன் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Related Stories
Recommended image1
Karuppu: கருப்பு படத்தின் முதல் விமர்சனத்தால் ஆடிப்போன கோலிவுட்! சத்தமில்லாமல் தயாரான தரமான சம்பவம்!
Recommended image2
Karuppu : சூர்யா முதல் த்ரிஷா வரை... கருப்பு படத்தில் நடிக்க வாரி வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved