இவருக்கு வயசே ஆகாதா..! இணையத்தை தெறிக்கவிடும் சூர்யாவின் நியூ லுக் போட்டோஸ்
சிறுத்தை சிவா படத்திற்காக புது லுக்கிற்கு மாறி உள்ள நடிகர் சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சூரரைப் போற்று, ஜெய்பீம் என இரண்டும் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த சூர்யா, தற்போது அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் தற்போது சூர்யா 42 திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை வீரம், விவேகம், விஸ்வாசம், அண்ணாத்த போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா தான் இயக்குகிறார்.
சூர்யா 42 படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார். அவர் நடிக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும். இது அதிரடி ஆக்ஷன்கள் நிறைந்த பேண்டஸி திரைப்படமாக தயாராகி வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் கோவாவிலும், இரண்டாம்கட்ட ஷூட்டிங் சென்னையில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்... விஜய்யின் லியோ படத்தில் இணைந்த அஜித் பட நடிகை - காஷ்மீரில் இருந்து வந்த லேட்டஸ்ட் அப்டேட்
குறிப்பாக பிஜி தீவில் தான் சூர்யா நடிக்கும் வரலாற்று காட்சிகளை படமாக்க உள்ளார்களாம். இன்னும் ஓரிரு மாதங்களில் சூர்யா 42 படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்துவிடும் என கூறப்படுகிறது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், சிறுத்தை சிவா படத்திற்காக புது லுக்கிற்கு மாறி உள்ள நடிகர் சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது 47 வயது ஆகும் நிலையில், இன்னும் இளமையாகவே காட்சியளிக்கும் சூர்யாவின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவருக்கு வயசே ஆகாதா என வியப்புடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... கோலிவுட்டில் திருமணமே செய்யாமல் டேட்டிங் செய்யும் காதல் ஜோடிகள் இத்தனை பேரா? என்ன லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது!