சர்வதேச திரைப்பட விழா பட்டியலில் இடம் பெற்ற சூர்யாவின் ஜெய் பீம்
இந்த விழா கோவாவில் நடைபெற உள்ளது என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

jai bhim
சூர்யாவின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்த படம் ஜெய் பீம். இதில் வக்கீலாக நடித்திருப்பார் சூர்யா. நீதிபதி கே சந்துரு அவர்களின் வழக்கு தொடர்பான அனுபவங்களை கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளியாகி இருந்த இதனை சூர்யா ஜோதிகாவின் 2டி நிறுவனம் தான் தயாரித்திருந்தது.
பொய் வழக்கில் கைது செய்யப்படும் ராஜகண்ணன் என்ற இருளர் லாக்கப்பில் அடித்துக் கொள்ளப்படும் கதைக்களத்தை கொண்டு ரசிகர்களின் மனதை உருக்கி இருந்தார் இயக்குனர். படம் வெளியானது முதலே பல பாராட்டுகளை பெற்று வந்தது. 94 ஆவது அகாடமி விருது உள்ளிட்ட பல பாராட்டுகளை பெற்றிருந்த இந்தப் படம் நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் இந்த வருட துவக்கத்தில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றது.
மேலும் செய்திகளுக்கு...நடிகை மீரா மிதுனை காணவில்லை... பரபரப்பு புகார் அளித்த அவரது தாயார்
தற்போது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் விழாவில் ஜெய் பீம் திரையிடப்பட உள்ளது. வரும் நவம்பர் 20ஆம் தேதி முதல் நவம்பர் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் 45 திரைப்படங்கள் கௌரிவிக்கப்படவுள்ளது. இதில் 20 ஆவணப்படங்களும், 25 கமர்ஷியல் திரைப்படங்களும் அடங்கும். ஆவண குறும்பட பட்டியலில் நவீன் குமாரின் லிட்டில் விங்ஸ் இடம் பெற்றுள்ளது. அதேபோல கமர்சியல் திரைப்பட பட்டியலில் சூர்யாவின் ஜெய்பீம், கிடா, குரங்கு பெடல் உள்ளிட்ட படங்கள் தேர்வாகியுள்ளன.
சூரரை போற்று படம் சமீபத்தில் தேசிய விருதை வென்றிருந்த நிலையில் ஜெய் பீம் தற்போது 53 வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்பது பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த விழா கோவாவில் நடைபெற உள்ளது என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு...ஜப்பானில் மாஸ்காட்டும் ஆர் ஆர் ஆர் டீம்.. கையில் ரோஜாவுடன் சுற்றி வரும் நட்சத்திரங்கள்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.