MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நடிகை மீரா மிதுனை காணவில்லை... பரபரப்பு புகார் அளித்த அவரது தாயார்

நடிகை மீரா மிதுனை காணவில்லை... பரபரப்பு புகார் அளித்த அவரது தாயார்

மீரா மிதுனின் தாயார் சியாமளா தனது மகளை கடந்த சில நாட்களாக காணவில்லை என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

2 Min read
Author : Kanmani P
Published : Oct 22 2022, 01:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மீராமிதுன். மூன்றாவது சீசனில் பங்கு பெற்ற இவர் பல சர்ச்சைகளை கிளப்பி விட்டிருந்தார். இயக்குனர் சேரன் மீது இவர் கொடுத்த புகார்கள் ரசிகர்களையே வெறுப்படையச் செய்தது. தன்னைத்தானே சூப்பர் மாடல் என கூறிக்கொண்டு சுற்றிவரும் மீரா மிதுன் விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களையும் விட்டு வைக்காமல் அவர்கள் குறித்து அவதூறு பரப்பி வந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இதற்கிடையே தனது ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் என பலவற்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அவ்வப்போது நெட்டிஷன்களை கடுப்பேற்றி வந்தார். இதனால் பலரும் இவரை கடுமையாக விமர்சித்து வந்தனர். 

35

இதற்கு இடையே பட்டியலின மக்கள் குறித்து இவர் பேசிய அவதூறு வீடியோ ஒன்று பரபரப்பாக பகிரப்பட்டது . இது தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீரா மிதுனையும் அவரது நண்பரையும் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்தனர். பின்னர் ஜாமினில் வெளி வந்தார்.

மேலும் செய்திகளுக்கு...ஜப்பானில் மாஸ்காட்டும் ஆர் ஆர் ஆர் டீம்.. கையில் ரோஜாவுடன் சுற்றி வரும் நட்சத்திரங்கள்

45

இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற விசாரணையின் போது அவரது நண்பர் ஷாம் மட்டுமே முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மீரா மிதுன் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து அவருக்கு பிடிவாரன்ட்  பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்க வந்தது. அப்போதும் மீரா மிதுன ஆஜராகவில்லை. அவர் தலைமறைவாகி விட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

55

மேலும் மீராவின் மொபைலும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர் இருப்பிடத்தை கண்டறிய முடியவில்லை என்றும் போலிஸ் தரப்பில் கூறப்பட்டது. உறவினர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறியிருந்தனர். இதையடுத்து நவம்பர் மாதம் 14ஆம் தேதி வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மீரா மிதுனின் தாயார் சியாமளா தனது மகளை கடந்த சில நாட்களாக காணவில்லை என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...அடேங்கப்பா மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்...முதல் நாளே மாஸ் வசூல் தான்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
61 வயதில் 3வது திருமணத்திற்கு தயாராகும் அமீர்கான்! காதலி கௌரி ஸ்ப்ராட்டுடன் விரைவில் திருமணம்?
Recommended image2
Now Playing
ரஜினியோட முதல் ஹீரோ பாட்டை எழுதிய கவிஞர் யார் தெரியுமா?! இசை, இயக்கம் என கலக்கிய சகலகலா வல்லவன் கதை!
Recommended image3
Bhanupriya: நடிகை பானுபிரியாவுக்கு என்ன ஆனது? உண்மைகளை போட்டு உடைத்த நடிகை குஷ்பூ.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved