அடேங்கப்பா மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்...முதல் நாளே மாஸ் வசூல் தான்
இந்த படத்தின் முதல் நாள் வசூல் பற்றி பார்க்கலாம்... இந்தியா முழுவதும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் ஐந்து கோடி ரூபாயை வசூலாக பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயனின் முதல் திருவிழா வெளியிடாக வெளியாகி உள்ளது பிரின்ஸ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டான் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவிற்பை பெற்றதோடு வசூலையும் குவித்து இருந்தது. தற்போது டோலிவுட்டில் சிவகார்த்திகேயன் அறிமுகமாகியுள்ள பிரின்ஸ் படம் வெளியாகி ரசிகர்களின் பேர் ஆதரவை பெற்று வருகிறது. தெலுங்கில் பிரபல இயக்குனராக இருக்கும் அனுதீப் இயக்கத்தில் வெளியாகியுள்ள பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் ஆசிரியராக நடித்துள்ளார்.
பாண்டிச்சேரியில் உள்ள ஒரு பள்ளிகள் சமூக அறிவியல் ஆசிரியராக இருக்கும் அன்பரசன் அதே பள்ளியில் ஆங்கிலம் கற்பிக்க வரும் ஜெசிகாவை காதலிக்கிறார். பின்னர் இருவரும் இணைவதில் பல இன்னல்கள் ஏற்படுகிறது. காதல் இணைவதில் ஏற்படும் கலாச்சார வேறுபாடுகளையம் எதிர்ப்புகளையும் மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.
இதில் அன்பரசனாக சிவகார்த்திகேயனும், ஜெசிக்காவாக மரியாவும், உலகநாதன், உலகநாதனின் தாத்தா என இரட்டை வேடத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகியுள்ளது பிரின்ஸ். எஸ்கே 20 யான இந்த படத்தின் சிங்கிள்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் கார்த்தியின் சர்தார் படத்திற்கு போட்டியாக வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 600 திரையரங்குகளில் ஆந்திராவில் 300 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரின்ஸ் படம் நேற்று காலை 5 மணி முதல் திரையிடப்பட்டு வரும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்திற்காக திரையரங்கு முழுவதும் கட்டவுட், பாலபிஷேகம் என மாஸ் காட்டி வந்தனர் எஸ்கேவின் ரசிகர்கள். நேற்று கொட்டும் மழையிலும் தனது குடும்பத்துடன் வந்த திரையரங்கில் படம் பார்த்தார் சிவகார்த்திகேயன். தற்போது இந்த படத்தின் முதல் நாள் வசூல் பற்றி பார்க்கலாம்... இந்தியா முழுவதும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் ஐந்து கோடி ரூபாயை வசூலாக பெற்றுள்ளது.