சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் துணிச்சலும், தைரியமும் சூர்யாவிற்கு இல்லையா?
Suriya Wrong Decision in Parasakthi Movie : சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் துணிச்சலும், தைரியமும் நடிகர் சூர்யாவிற்கு இல்லை என்று பிரபல விநியோகஸ்தர் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

சூர்யா 46
Suriya Wrong Decision in Parasakthi Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா இப்போது வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் சூர்யா நடிப்பில் கடைசியாக ரெட்ரோ படம் வெளியானது. ஆனால், அந்தப் படத்தின் வசூலானது டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் வெற்றியால் பாதிக்கப்பட்டது. இப்போது இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இது தவிர சூர்யா 46 படத்திலும் நடிக்கிறார். இந்தப் படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு போடப்பட்டது. இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்குகிறார்.
சிவகார்த்திகேயன் அண்ட் சூர்யா
இதில் சூர்யாவிற்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார். இந்த நிலையில் தான் சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் துணிச்சலும், தைரியமும் சூர்யாவிற்கு இல்லை என்று பிரபல விநியோகஸ்தர் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். முதலில் இந்தப் படத்தில் சூர்யா தான் நடிக்க இருந்தார். படத்திற்கு புறநானூறு என்று டைட்டிலும் தேர்வு செய்யப்பட்டிருந்தது.
சுதா கொங்கரா மற்றும் சிவகார்த்திகேயன் காம்போ
ஆனால், ஒரு சில காரணங்களால் சூர்யா அந்த படத்திலிருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து சுதா கொங்கரா மற்றும் சிவகார்த்திகேயன் காம்போவில் இப்போது பராசக்தி படம் உருவாகி வருகிறது. படத்தின் தலைப்பு மாற்றப்பட்டதோடு ஹீரோவும் மாற்றப்பட்டுள்ளார்.
சிவகார்த்திகேயனின் பராசக்தி இந்தி எதிர்ப்பு கதை
இந்த நிலையில் தான் பிரபல தமிழ்நாட்டின் விநியோகஸ்தர் ஒருவர் சூர்யா இந்தப் படத்திலிருந்து விலகியதற்கான காரணத்தையும் சிவகார்த்திகேயன் இணைந்ததற்கான காரணத்தையும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். சிவகார்த்திகேயனின் பராசக்தி இந்தி எதிர்ப்பு கதையை மையப்படுத்திய படமாக உருவாகி வருகிறது. படத்தின் கதையில் அதிக உறுதியோடு இருந்த சிவகார்த்திகேயன் உடனடியாக இந்தப் படத்திற்கான கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார்.
ஏன் சூர்யா விலகினார்?
ஆனால், படத்திற்கான முக்கிய கருத்து மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சூர்யா இந்தப் படத்திலிருந்து விலகியிருக்க்கலாம் என்று அவர் பேசியிருக்கிறார். சிவகார்த்திகேயனின் இந்த துணிச்சலான முடிவு அவருக்கான வெற்றிப் பயணத்தை தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்தப் படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் பலர் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.