- Home
- Gallery
- Sivakarthikeyan : இந்தியன் 2வில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய சிவகார்த்திகேயன் - அதுவும் இந்த கேரக்டரிலா?
Sivakarthikeyan : இந்தியன் 2வில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய சிவகார்த்திகேயன் - அதுவும் இந்த கேரக்டரிலா?
ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை நடிகர் சிவகார்த்திகேயன் தவறவிட்டுள்ள நிலையில், அவர் எந்த ரோலில் நடிக்க இருந்தார் என்பதை பார்க்கலாம்.

Sivakarthikeyan
கோலிவுட்டில் அசுர வளர்ச்சி கண்ட ஹீரோ என்றால் அது சிவகார்த்திகேயன் தான். சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்து தற்போது டாப் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார் எஸ்.கே. மெரினா படம் மூலம் அறிமுகமான சிவகார்த்திகேயன், தற்போது விஜய், அஜித்துக்கு நிகராக மார்க்கெட் இருக்கும் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். தற்போது விஜய் சினிமாவை விட்டு விலக உள்ளதால், அடுத்த தளபதி ரேஞ்சுக்கு எஸ்.கே.வை கொண்டாடி வருகின்றனர்.
Sivakarthikeyan Movies
அவர் நடிப்பில் தற்போது அமரன் திரைப்படம் உருவாகி உள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. இதுதவிர ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார் எஸ்.கே. மேலும் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம், குட் நைட் பட இயக்குனர் விநாயக் இயக்கத்தில் ஒரு படம் என சிவகார்த்திகேயனின் லைன் அப் நீண்டு கொண்டே செல்கிறது.
இதையும் படியுங்கள்... 7ம் வகுப்புக்கு தமன்னா பற்றிய பாடம் எதுக்கு? தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் புகார்
Sivakarthikeyan Missed Indian 2 Movie
இப்படி பிசியான நடிகராக வலம் வருவதால் அவர் பல பட வாய்ப்புகளையும் இழந்து இருக்கிறார். குறிப்பாக நெல்சன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மகன் கேரக்டரில் நடிக்க இருந்தது சிவகார்த்திகேயன் தான். ஆனால் வேறு படங்களில் பிசியானதால் அவரால் அந்த ரோலில் நடிக்க முடியாமல் போனது. பின்னர் அந்த கேரக்டரில் வஸந்த் ரவி நடித்திருந்தார். அவருக்கு அது பயனுள்ளதாக அமைந்தது.
Siddharth replace sivakarthikeyan in Indian 2
ரஜினியை தொடர்ந்து கமல்ஹாசன் உடன் நடிக்க வந்த வாய்ப்பை சிவகார்த்திகேயன் மிஸ் பண்ணி உள்ள தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி கமல்ஹாசன் நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இந்தியன் 2 படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கும் ஐடியாவில் இருந்தாராம் ஷங்கர். அவருக்கு கேரக்டர் பிடித்துப்போய் ஓகே சொன்னாலும், அவரால் கால்ஷீட் ஒதுக்க முடியாமல் போனதால் நடிக்க முடியவில்லையாம். இதையடுத்து அந்த ரோலில் சித்தார்த்தை நடிக்க வைத்துள்ளனர். இதுவும் ஜெயிலர் போல காஸ்ட்லி மிஸ் ஆக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... Indian 2: ஒரு பாட்டுக்கு மட்டும் 30 கோடி செலவு.. அடேங்கப்பா இந்தியன் 2 படத்தின் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா?