Prathap Pothan: யார் இந்த பிரதாப் போத்தன்...? இவரது இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த வெற்றி படங்கள் லிஸ்ட்..
Prathap Pothan Death: பிரபல தமிழ் நடிகரும், இயக்குநரும், ராதிகாவின் முன்னாள் கணவருமான பிரதாப் போத்தன் வயது 70 உடல் நலக் குறைவு காரணமாக சிகிக்சை பெற்று வந்த நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று உயிரிழந்துள்ளார்.
Prathap Pothan:
கேரளாவை சேர்ந்த பிரதாப் போத்தன் 1978ம் ஆண்டு வெளியான ஆரவம் என்ற மழையாளப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து தமிழில் முதன்முறையாக 1979ம் ஆண்டு அழியாத கோலமங்கள் படத்தின் மூலம் தோன்றினார்.
Prathap Pothan:
தொடர்ந்து இளமை கோலம், மூடுபனி, பன்னீர் புஷ் பங்கள், வறுமையின் நிறம் சிவப்பு குடும்பம் ஒரு கதம்பம், புதுமைப்பெண், ஜல்லிக்கட்டு, படிக்காதவன் ஆகிய படங்களின் இவரின் பாத்திரங்கள் பெறும் வரவேற்பை பெற்று தந்தது. இவர் இதுவரை, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.
மேலும் படிக்க ...15 வயதில் தந்தையை இழந்த பிரதாப் போத்தன்... சினிமாவிற்குள் வந்தது எப்படி?
Prathap Pothan:
பிரதாப் போத்தன் சினிமாவில் நடிப்பைத் தாண்டி இயக்கத்திலும் வெற்றி கண்டவர். அதுமட்டுமின்றி, கமல், பிரபு, அமலா, குஷ்பூ போன்ற பிரபலங்கள் நடித்த ஆக்ஷன் த்ரில்லர் கலந்த படமான வெற்றிவிழா, பிரபு நடித்த மைடியர் மார்த்தாண்டன், நெப்போலியன் நடிப்பில் 1994-ல் வெளியான சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.
மேலும் படிக்க...நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார்
குறிப்பாக, நெப்போலியனுக்கு சீவலப்பேரி அவரது சினிமா கேரியரில் திருப்பு முனையாக அமைந்தது. இந்தப் படங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட 175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிரபல தமிழ் நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் வயது 70 உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.