MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பட்டு சேலையில் சன்னி லியோன்! ஜி.பி.முத்துவுடன் மேடையில் செம்ம அரட்டை! 'ஓ மை கோஸ்ட்' ஆடியோ லான்ச் போட்டோஸ்.!

பட்டு சேலையில் சன்னி லியோன்! ஜி.பி.முத்துவுடன் மேடையில் செம்ம அரட்டை! 'ஓ மை கோஸ்ட்' ஆடியோ லான்ச் போட்டோஸ்.!

நடிகை சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமாக நடந்த நிலையில், இது குறித்த போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

3 Min read
Author : manimegalai a
Published : Nov 03 2022, 04:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

VAU MEDIA ENTERTAINMENT மற்றும் WHITE HORSE STUDIOS  சார்பில்  D.வீரா சக்தி & K. சசிகுமார் வழங்கும், சன்னி லியோன், சதீஷ்நடிப்பில், இயக்குநர் யுவன் இயக்கத்தில், வரலாற்று பின்னணியில் உருவாகும்  ஹாரர் காமெடி  திரைப்படம்  “ஓ மை கோஸ்ட்” (OMG). விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

28

நடிகை சன்னி   லியோன்  மனிதநேயமிக்க  நபர்.  இந்த படம் பற்றி சதீஷ் என்னிடம் கூறியபோது, ஒரு வெற்றி படத்திற்கான அனைத்து அம்சமும் இந்த படத்தில் இருப்பதை என்னால் உணர முடிந்தது. டார்க் காமெடி திரைப்படங்கள் இப்போது அதிகமாக  வந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் ஹாரர் உடன் கலந்த டார்க் காமெடி திரைப்படம். படம் நன்றாக வந்துள்ளது. ஒரு புதிய தயாரிப்பாளர் நமது திரைத்துறைக்கு வந்து இருக்கிறார். அவரை வரவேற்க வேண்டியது நமது கடமை. இந்த திரைப்படம்  வெற்றியடைந்தது, இதில் பங்கேற்று இருக்கும் அனைவருக்கும் வெற்றி படமாக இது  அமைய வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

மோடியை பாராட்டிய விஷால்... ஒரே டுவிட்டில் நோஸ் கட் செய்த பிரகாஷ் ராஜ் 

38

இயக்குநர் தங்கர் பச்சான் பேசியதாவது.. இப்பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தை நான் இயக்குகிறேன். இந்த படமும், இந்த தயாரிப்பாளர் எடுக்கும் அடுத்த படமும் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றும் படமாக இருக்கும்.  திரைப்படங்கள் மக்கள் வாழ்வில் மிகப்பெரிய ஒரு அங்கமாக திகழ்கிறது. ஊடகங்கள் சிறிய திரைப்படங்களுக்கு ஆதரவு தர வேண்டும். நேர்மையான விமர்சனம் தான் திரைப்படத்திற்கு தேவை. மண் சார்ந்த திரைப்படங்களை நாம் எடுக்க வேண்டும். அப்படிபட்ட திரைப்படங்களை எடுக்கும், இயக்குனர்களும் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் ஆதரவு தேவை. இந்த  திரைப்படம் வெற்றியடைய எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

48

பிக்பாஸ் ஜிபி முத்து  பேசுகையில், இது தான் எனது முதல் திரைப்படம், முன் அனுபவம் இல்லாத எனக்கு, இயக்குனர் தான் பக்கபலமாக இருந்தார். தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்தில் எனக்கு சிறப்பான ஒரு கதாபாத்திரத்தை கொடுத்துள்ளனர். அந்த பாத்திரம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். உங்களுடைய ஆதரவு இந்த படத்திற்கு தேவை. அனைவரும் ஆதரவு தாருங்கள்.

மழை காலங்களில்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 உணவு வகைகள்! 

58

நடிகர் சதீஷ் பேசியதாவது... இந்த படத்தின் கதையை இயக்குநர் கூறியபோது, அதில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருந்தது. அதில் சன்னி லியோன் நடிக்கிறார் என்ற உடன், நான் இந்த படத்தில் நடிக்க ஒத்து கொண்டேன். சன்னி லியோன் ஒரு சிறந்த மனிதநேயம் மிக்க நபர், அவரை நெருங்கவே நாங்கள் தயங்கி கொண்டு இருந்தோம். ஆனால் அவர் இலகுவாக மிக இயல்பாக எங்களிடம் பழகினார். அவர் இந்த படத்தில் மிகப்பெரிய அர்பணிப்பை கொடுத்துள்ளார். சிறப்பாக நடித்துள்ளார். அனைவரும் கடின உழைப்பை கொடுத்து, இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.

68

நடிகை சன்னி லியோன் கூறியதாவது... தமிழகம்  வந்து உங்களை சந்திதது மகிழ்ச்சி. நீங்கள் கொடுக்கும் வரவேற்பும், அன்பும் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. OMG திரைப்படத்திற்காக அனைவரும் கடின உழைப்பையும், அர்பணிப்பையும் கொடுத்துள்ளோம்.  இந்த படத்தை பார்க்க உங்களது நேரத்தையும் பணத்தையும் நீங்கள் ஒதுக்குவதற்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். எங்களது கனவை நீங்கள் பார்க்க போகிறீர்கள். உங்களது அன்பும் ஆதரவும் எங்களுக்கு தேவை.

மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனின் சகோதரர் இல.கோபாலன் 80-வது மணி விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்பு!

78

இவரை தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் வீர சக்தி, இந்த படம் முழுக்க முழுக்க காமெடி நிறைந்த ஒரு கதை. முதல் பாதி காமெடியும், இரண்டாவது பாதி சன்னி லியோன் வரும் பிரம்மாண்டமும் படத்தில் நிறைந்து இருக்கும். நீங்கள் ரசிக்கும் வகையில் இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். நடிகர்கள், இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை என தெரிவித்தார்.

88

நடிகை சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தீபக் D. மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்துக்கு பின் சினிமாவில் இருந்து விலகுகிறாரா ஹன்சிகா?... அவரே சொன்ன ‘நச்’ பதில்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராஷ்மிகாவை விட விஜய் தேவரகொண்டா இத்தனை வயசு மூத்தவரா? வெளிவந்த வயது வித்தியாசம்
Recommended image2
தாய் கிழவி முதல் தடயம் வரை... பிப்ரவரி 27ல் தியேட்டர் & OTT-ல் புது ரிலீஸ் என்னென்ன?
Recommended image3
நான் யாரையும் காலி பண்ண வரல; எனக்கு சிலர் தடை போடுறாங்க..! புயலை கிளப்பிய சிவகார்த்திகேயன் ஸ்பீச்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved