மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனின் சகோதரர் இல.கோபாலன் 80-வது மணி விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்பு!
கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மணிப்பூர் மாநில ஆளுநரும், மேற்கு வங்கம் மாநில பொறுப்பா ஆளுநருமான இல.கணேசனின் சகோதரர், இல.கோபாலன் அவர்களுக்கு நடந்த 80-ஆவது மணிவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான... 'அண்ணாத்த' திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ரஜினிகாந்த்தின் படு மாஸ் காட்சிகளை எதிர்பார்த்து, திரையரங்கம் வந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை கொடுத்த போதிலும், செண்டிமெண்ட் காட்சிகளால் குடும்ப ரசிகர்களை கவர் செய்து விட்டார் இயக்குனர் சிவா என, சில பாசிட்டிவ் விமர்சனங்களும் இந்த படத்திற்கு கிடைத்தது.
இந்த படத்தை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்க பல, இயக்குனர்கள் போட்டி போட்ட நிலையில், அந்த வாய்ப்பை தட்டி தூக்கினார்... நயன்தாராவை வைத்து 'கோலமாவு கோகிலா', சிவகார்த்திகேயனை வைத்து 'டாக்டர்', மற்றும் விஜய்யை வைத்து 'பீஸ்ட்' படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார். இவர் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா , மற்றும் டாக்டர், ஆகிய இரண்டு படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், பீஸ்ட் திரைப்படம் மட்டும் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறாதது, மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.
திருமணத்துக்கு பின் சினிமாவில் இருந்து விலகுகிறாரா ஹன்சிகா?... அவரே சொன்ன ‘நச்’ பதில்
மோடியை பாராட்டிய விஷால்... ஒரே டுவிட்டில் நோஸ் கட் செய்த பிரகாஷ் ராஜ்
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தை மிக பிரமாண்டமாக இயக்கி வருகிறார் நெல்சன் திலீப் குமார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான போதே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தமன்னா இந்த படத்தின் நாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன், தரமணி பட நாயகன் வஸந்த் ரவி, யோகிபாபு, கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், மலையாள நடிகர் விநாயக் ஆகியோர் நடித்து வருகிறார்கள். அனிரூத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
bigg boss tamil 6 vikraman : சின்னத்திரைக்கு மிகவும் நெருக்கமான நபரா விக்ரமன்?
மீண்டும் காதல்... சிம்பு - திரிஷா குறித்து விரைவில் வருகிறது குட் நியூஸ்..!
ஜெயிலர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு, நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று சென்னையில் நடைபெற்ற மணிப்பூர் மாநில ஆளுநரும், மேற்கு வங்கம் மாநில பொறுப்பா ஆளுநருமான... இல.கணேசன் அவர்களின் சகோதரர் இல. கோபாலன் அவர்களின் 80 பிறந்த நாள் விழாவில், கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வதற்காக வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆக்கி வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள்... அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.