மீண்டும் காதல்... சிம்பு - திரிஷா குறித்து விரைவில் வருகிறது குட் நியூஸ்..!
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் காதல் ஜோடியாக நடித்திருந்த சிம்புவும், திரிஷாவும் விரைவில் குட் நியூஸ் ஒன்றை சொல்ல உள்ளார்களாம்.
நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்த பின்னர் சினிமாவில் படு பிசியாகி உள்ளார். இதற்கு காரணம் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டானது தான். தற்போது பத்து தல படத்தில் பிசியாக நடித்து வருகிறார் சிம்பு. இப்படத்தை சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கி வருகிறார்.
பத்து தல படத்துக்கு பின்னர் சிம்பு கைவசம் கொரோனா குமார், வெந்து தணிந்தது காடு 2-ம் பாகம், விண்ணைத்தாண்டி வருவாயா 2-ம் பாகம் போன்ற படங்கள் உள்ளன. இதில் அவர் வெந்து தணிந்தது காடு 2-ம் பாகத்தில் தான் அடுத்ததாக நடிப்பார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் அப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் இன்னும் முடிவடையாததால் அவர் நடிக்கும் அடுத்த படம் மாற்றப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்.. கவர்ச்சி நாயகி சன்னி லியோன் உடன் பிக்பாஸ் புகழ் ஜிபி முத்து நடித்துள்ள ‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் டிரைலர் இதோ
அதன்படி விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க தான் சிம்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2010-ம் வெளியான திரைப்படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. இப்படம் ரிலீசாகி 12 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் அப்படத்தில் நடித்த சிம்பு - திரிஷா இடையேயான கெமிஸ்ட்ரி தான்.
அப்படத்தில் காதல் ஜோடிகளாக நடித்திருந்த சிம்புவும், திரிஷாவும் தற்போது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் மூலம் மீண்டும் ரொமான்ஸ் செய்ய தயாராகி வருகின்றனர். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் சிம்பு - திரிஷா கூட்டணி குறித்த குட் நியூஸுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இப்படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைப்பார் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்.. OTT-யை ஆக்கிரமித்த பிரம்மாண்ட படங்கள்.. Theatre-ல் வரிசை கட்டும் சிறுபட்ஜெட் மூவீஸ் - இந்த வார வெளியீடுகள் இதோ