கவர்ச்சி நாயகி சன்னி லியோன் உடன் பிக்பாஸ் புகழ் ஜிபி முத்து நடித்துள்ள ‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் டிரைலர் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன ஜிபி முத்து, கவர்ச்சி நாயகி சன்னி லியோன் உடன் இணைந்து நடித்துள்ள ‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

First Published Nov 3, 2022, 8:21 AM IST | Last Updated Nov 3, 2022, 8:21 AM IST

சிந்தனை செய் படத்தின் இயக்குனரான ஆர்.யுவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஓ மை கோஸ்ட். இப்படத்தில் கவர்ச்சி நாயகி சன்னி லியோன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் பிக்பாஸ் புகழ் ஜிபி முத்து, நடிகை தர்ஷா குப்தா, நகைச்சுவை நடிகர்கள் சதீஷ், யோகிபாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

காமெடி கலந்த ஹாரர் திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆகி வருகின்றன. இப்படத்தின் பாடல்களுக்கு ஜாவத் ரியாஸ் இசையமைத்து உள்ளார். அதேபோல் தரண்குமார் பின்னணி இசை அமைத்திருக்கிறார். இப்படத்தை வீரசக்தி மற்றும் சசிகுமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... OTT-யை ஆக்கிரமித்த பிரம்மாண்ட படங்கள்.. Theatre-ல் வரிசை கட்டும் சிறுபட்ஜெட் மூவீஸ் - இந்த வார வெளியீடுகள் இதோ

Video Top Stories