திருமணத்துக்கு பின் சினிமாவில் இருந்து விலகுகிறாரா ஹன்சிகா?... அவரே சொன்ன ‘நச்’ பதில்
திருமணத்திற்கு பின்னர் நடிகை ஹன்சிகா, சினிமாவில் தொடர்ந்து நடிப்பாரா என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்த நிலையில், அதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்.
திருமண ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரமாக நடந்துகொண்டிருக்க மறுபுறம் திருமணத்திற்கு பின்னர் நடிகை ஹன்சிகா, சினிமாவில் தொடர்ந்து நடிப்பாரா அல்லது நடிப்புக்கு முழுக்கு போடுவாரா என்கிற கேள்வியும் தொடர்ந்து எழுந்து வந்தது. இதற்கு நடிகை ஹன்சிகாவே ஓப்பனாக பதிலளித்து உள்ளார்.
இதையும் படியுங்கள்... ஈஃபில் டவர் முன் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்... வருங்கால கணவருடன் ரொமான்ஸ் செய்த ஹன்சிகா - வைரலாகும் போட்டோஸ்
நேற்று நடிகை ஹன்சிகா தனது வருங்கால கணவரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். அப்போது ஈஃபில் டவர் முன் சோஹைல் தனக்கு புரபோஸ் செய்வது போல் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். அத்தோடு தனது திருமணம் குறித்து ஒரு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.
அதில் தான் திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்பதை திட்டவட்டமாக குறிப்பிட்டு இருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். நடிகை ஹன்சிகா கைவசம் தற்போது பார்ட்னர், ரவுடி பேபி, மை நேம் இஸ் சுருதி, கார்டியன், மை3 உள்பட அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்... bigg boss tamil 6 vikraman : சின்னத்திரைக்கு மிகவும் நெருக்கமான நபரா விக்ரமன்?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
