ஈஃபில் டவர் முன் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்... வருங்கால கணவருடன் ரொமான்ஸ் செய்த ஹன்சிகா - வைரலாகும் போட்டோஸ்
நடிகை ஹன்சிகா, தனது வருங்கால கணவருடன் பாரிஸில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபில் டவர் முன்பு ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்டை நடத்தி உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் ஹன்சிகா. தனுஷின் மாப்பிள்ளை படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான இவர் குறுகிய காலத்திலேயே விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து டாப் ஹீரோயினாக வலம் வந்தார். சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் ஹன்சிகா அண்மையில் தனது 50-வது படத்தை ரிலீஸ் செய்தார்.
அப்படத்தில் ஹன்சிகா தனது முன்னாள் காதலன் சிம்புவுடன் நடித்திருந்தார். அவரது காதலைப் போல் அப்படமும் பிளாப் ஆனது. இவ்வாறு சினிமாவில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த ஹன்சிகா, தற்போது திருமணம் செய்துகொள்ளும் முடிவுக்கு வந்துள்ளார்.
இதையும் படியுங்கள்... நான் ஸ்டாப்பாக வசூலை வாரிக்குவிக்கும் காந்தாரா... ரூ.300 கோடி கிளப்பில் இணைந்து சாதனை
இவரது திருமணம் வருகிற டிசம்பர் மாதம் 4-ந் தேதி ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெற உள்ளது. இதற்காக அங்குள்ள 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனையை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஹன்சிகாவின் திருமண ஏற்பாடுகள் ஒருபுறம் தடபுடலாக நடக்க, அவர் யாரை திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர்.
இந்நிலையில், தனது வருங்கால கணவரை ஹன்சிகா அறிமுகப்படுத்தி உள்ளார். அவர் சோஹைல் கதூரியா என்கிற தொழிலதிபரை தான் திருமணம் செய்துகொள்ள உள்ளாராம். பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் குடும்பத்தினர் சம்மதத்துடன் தற்போது திருமணம் செய்துகொள்ள தயாராகி உள்ளனர்.
தனது வருங்கால கணவருடன் பாரிஸில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபில் டவர் முன்பு ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்டை நடத்தி உள்ளார் ஹன்சிகா. அதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹன்சிகாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... ரஜினிக்கு குடைபிடித்த அமைச்சர்... ராஜமரியாதை கொடுத்த முதல்வர் - கர்நாடகாவில் மாஸ் காட்டிய சூப்பர்ஸ்டார்