நான் ஸ்டாப்பாக வசூலை வாரிக்குவிக்கும் காந்தாரா... ரூ.300 கோடி கிளப்பில் இணைந்து சாதனை
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளிலும் வசூலை வாரிக்குவித்து வருகிறது.
கன்னட சினிமா 2022-ம் ஆண்டு அசுர வளர்ச்சி கண்டுள்ளது. அதற்கு காரணம் இந்த ஆண்டு முதல் பாதியில் கே.ஜி.எஃப் 2 படம் வெளியாகி இந்தியா முழுவதும் சக்கைப்போடு போட்டது. அதுமட்டுமின்றி இந்தியா முழுவதும் அனைத்து மொழிகளிலும் இந்த ஆண்டு ரிலீசான படங்களில் அதிக வசூல் ஈட்டிய படம் என்றால் அது கே.ஜி.எஃப் 2 தான். இப்படம் ரூ.1,250 கோடிக்கு மேல் வசூலித்தது.
முதல் பாதியில் கே.ஜி.எஃப் 2 எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதேபோல் இரண்டாம் பாதியில் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா திரைப்படம் பட்டைய கிளப்பி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி கன்னடத்தில் மட்டும் ரிலீசான இப்படம் அங்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றதை அடுத்து அக்டோபர் 2-வது வாரத்தில் இருந்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
இதையும் படியுங்கள்... இந்திய பாக்ஸ் ஆபிஸில் முதலிடம்.. 2022-ல் அசுர வளர்ச்சி கண்ட கன்னட சினிமா - காரணமாக இருந்த 5 படங்கள் ஒரு பார்வை
அனைத்து மொழிகளிலும் வெளியானதை அடுத்து காந்தாரா படத்தின் வசூல் ஜெட் வேகத்தில் உயரத் தொடங்கியது. வெறும் 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. கன்னட சினிமா வரலாற்றில் கே.ஜி.எஃப் 2 படத்துக்கு பின்னர் அதிக வசூல் ஈட்டிய படமாக காந்தாரா மாறி உள்ளது.
இந்த 300 கோடியில் கர்நாடகாவில் மட்டும் இப்படம் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரிலீசாகி ஒரு மாதங்களைக் கடந்தும் வெற்றிநடைபோட்டு வரும் காந்தாரா படம் மேலும் சில வசூல் சாதனைகளையும் நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பால் அதன் இயக்குனரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி செம்ம ஹாப்பியாக உள்ளாராம்.
இதையும் படியுங்கள்... கன்னடத்தை தொடர்ந்து தமிழிலும் மாஸ் காட்டும் காந்தாரா... இயக்குனரை கட்டிப்பிடித்து பாராட்டிய கார்த்தி