ரவி மோகன் - ஆர்த்தி பிரிவுக்கு தனுஷ் தான் காரணம் - புது குண்டை தூக்கிப்போட்ட சுசித்ரா
நடிகர் ரவி மோகனும், அவரது மனைவி ஆர்த்தியும் விவாகரத்து பெற்று பிரிந்ததற்கு நடிகர் தனுஷ் தான் காரணம் என பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.

Singer Suchitra Interview
பாடகி சுசித்ரா சமீப காலமாக பல சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு கோலிவுட்டில் நடக்கும் போதைப் பார்ட்டி பற்றி பேசிய அவர், தற்போது பரபரப்பாக பேசப்படும் ரவி மோகன் - ஆர்த்தி ரவி விவாகரத்து பற்றி ஹைவுட் எண்டர்டெயின்மெண்ட் என்கிற யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், அவர்களது விவாகரத்துக்கு நடிகர் தனுஷ் தான் காரணம் என கூறி அதிர்ச்சி அளித்துள்ளார் சுசித்ரா.
ஆர்த்திக்கு பார்ட்டி மூலம் பழக்கமான தனுஷ்
ஆர்த்தி ரவி திருமணத்துக்கு முன்பு ரவி மோகனை காதலிக்கும் வரை வேறொரு பெண்ணாக இருந்ததாகவும், திருமணத்துக்கு பின் அப்படியே மாறிவிட்டதாகவும் சுசித்ரா தெரிவித்துள்ளார். ஜெயம் ரவி ஷூட்டிங் போன பின்னர் ஆர்த்தி பார்ட்டிக்கு செல்வார் என்றும், அப்படி பார்ட்டிக்கு சென்றபோது தனுஷ் உடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருக்கமானதாகவும், இந்த விஷயமெல்லாம் ரவி மோகனுக்கு தெரிந்த பின்னரே அவர் ஆர்த்தியை விட்டு பிரிய முடிவு செய்ததாக சுசித்ரா அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
மகன்களை பார்க்க முடியாமல் திண்டாடும் ரவி மோகன்
தற்போது ஆர்த்தி தன்னுடைய மகன்களை வைத்து ஜெயம் ரவியை பிளாக் மெயில் செய்து வருவதாக சுசித்ரா தெரிவித்துள்ளார். அண்மையில் ரவி மோகன் தன் அறிக்கையில் கூட தான் ஆர்த்தியை தான் பிரிய முடிவு செய்துள்ளேன் தன் மகன்களை அல்ல என்று குறிப்பிட்டிருந்தார். தன்னுடைய மகன்களை ஆர்த்தி பார்க்க விடுவதில்லை என்பதால், பள்ளி வாயிலாக மகன்களை பார்க்க முயற்சித்துள்ளார் ரவி மோகன். இந்த விஷயம் அறிந்த ஆர்த்தி, பாடிகார்டுகளுடன் மகன்களை பள்ளிக்கு அனுப்பி வருகிறாராம்.
யூடியூப்பர்களுக்கு காசு கொடுக்கும் ஆர்த்தி ரவி
ஆர்த்தி அறிக்கை வெளியிட்டு அனுதாபம் தேட முயற்சிப்பது மட்டுமின்றி பல யூடியூப் சேனல்களுக்கு காசு கொடுத்து ரவி மோகன் - கெனிஷா பற்றி அவதூறு பரப்பி வருவதாகவும் சுசித்ரா கூறி உள்ளார். கெனிஷா மிகவும் அப்பாவி என்றும், அவர் ரவி மோகனின் நிலையை தன்னிடம் எடுத்துக் கூறி கவலை அடைந்ததாகவும் கூறி சுசித்ரா. அவர்கள் இருவரும் தற்போது ரிலேஷன் ஷிப்பில் தான் உள்ளார்கள் என்பதையும் அந்த பேட்டியின் மூலம் உறுதிப்படுத்தினார். ரவி மோகன் - ஆர்த்தி பிரிவுக்கு தனுஷ் தான் காரணம் என சுசித்ரா கூறி இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.