MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கெனிஷா தான் என் வாழ்க்கை துணை; முதுகில் குத்திய ஆர்த்திக்கு பதிலடி கொடுத்த ரவி மோகன்

கெனிஷா தான் என் வாழ்க்கை துணை; முதுகில் குத்திய ஆர்த்திக்கு பதிலடி கொடுத்த ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் விவாகரத்து சர்ச்சை பூதாகரமான நிலையில், தற்போது கெனிஷா உடனான உறவு பற்றியும், ஆர்த்தி வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : May 15 2025, 02:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ravi Mohan Statement
Image Credit : Asianet News

Ravi Mohan Statement

நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் எனது வாழ்க்கையை உருவாக்கி உள்ளேன். கடந்த கால திருமண வாழ்க்கையை வைத்து மலிவான அனுதாபம் தேடுவதை என்னால் அனுமதிக்க முடியாது. மனைவியால் மனதளவிலும், உடல் அளவிலும், உணர்வு ரீதியாகவும் கடந்த காலங்களில் துன்புறுத்தப்பட்டேன்.

24
பொன் முட்டையிடும் வாத்தாகவே என்னை பயன்படுத்தினார் ஆர்த்தி
Image Credit : Google

பொன் முட்டையிடும் வாத்தாகவே என்னை பயன்படுத்தினார் ஆர்த்தி

நான் மனைவியை மட்டுமே பிரிய முடிவு செய்துள்ளேன். மகன்களை அல்ல. என் மகன்களை பயன்படுத்தி பணரீதியாக ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். ஆர்த்தி உடன் என் திருமண வாழ்க்கையை தொடர எவ்வளவோ முயற்சி செய்தேன். அவர் பொன் முட்டையிடும் வாத்தாகவே என்னை பயன்படுத்தினார். என்னை ஒரு கணவராக அவர் மதிக்கவே இல்லை. எனது மகன்கள் இருவரையும் பார்க்கவிடாமல் என்னை தடுத்து வருகின்றனர். 5 ஆண்டுகளாக எனது வருமானம் அனைத்தையும் ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தான் அனுபவித்து வந்தனர்.

Related Articles

Related image1
கெனிஷாவை இம்பிரஸ் பண்ண ரவி மோகன் வாங்கிக் கொடுத்த வீடு; அதன் மதிப்பு இத்தனை கோடியா?
Related image2
ரவி மோகனை பணம் காய்க்கும் மரமாக்கிய மாமியார் - தயாரிப்பாளர் சொன்ன ஷாக்கிங் தகவல்
34
விவாகரத்து முடிவால் மகிழ்ச்சியாக இருக்கிறேன் - ரவி மோகன்
Image Credit : our own

விவாகரத்து முடிவால் மகிழ்ச்சியாக இருக்கிறேன் - ரவி மோகன்

இத்தனை நாட்கள் பொறுமையாக இருந்தேன். எனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. எனது காயங்களை உணராமல் எனது கண்ணியத்தை கேள்விக்குறியாக்குவதால் நான் பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது நான் எடுத்துள்ள முடிவால் முன்பு இல்லாத அளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது குழந்தைகள் எனது பெருமை, மகிழ்ச்சி, அவர்களுக்காக அனைத்தையும் செய்வேன். சில நாட்களாக எனக்கிருந்த வருத்தம் 16 ஆண்டுகால துயரமான வாழ்க்கையைவிட பெரிதல்ல.

44
கெனிஷா என் வாழ்க்கை துணை
Image Credit : Social Media

கெனிஷா என் வாழ்க்கை துணை

என் வாழ்வில் ஒளியை கொண்டு வந்தவர் கெனிஷா. என்னுடைய வீட்டை விட்டு எதுவுமில்லாமல் நான் வெளியேறியபோது எனக்கு துணையாக நின்றவர் கெனிஷா. அவர் என் வாழ்க்கையின் அழகான துணை. வாழ்க்கையில் நான் சந்தித்த சட்ட ரீதியான, உணர்வு ரீதியான, நிதி ரீதியான எல்லா பிரச்சனைகளிலும் என்னுடன் துணை நின்றார். என் வாழ்வில் ஒளியை கொண்டு வந்தவர் கெனிஷா. என்னுடைய கதையை கேட்ட அடுத்த நிமிடத்தில் இருந்து ஒரு மனநல ஆலோசகராக மட்டும் இல்லாமல் தோழியாகவும் இருந்து எனக்கு உதவினார்” என ரவி மோகன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜெயம் ரவி
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Lokesh Kanagaraj: முன்னணி ஹீரோக்களுக்கு இணையான சம்பளம்.! மாஸ் காட்டும் லோகேஷ் கனகராஜ்!
Recommended image2
Parasakthi: எதிர்பார்த்ததை விட எக்கச்சக்க வசூல்! பராசக்தி படத்தின் வெற்றி கொண்டாட்டம்! வைரலாகும் எஸ்கே - சுதா கொங்கரா புகைப்படங்கள்!
Recommended image3
Moondru Mudichu Jan 13: சீரியல் ரசிகர்களை உருக வைத்த நந்தினியின் ஒரு முடிவு! சுந்தரவல்லி வீட்டில் நடந்த அதிரடி சீன்!
Related Stories
Recommended image1
கெனிஷாவை இம்பிரஸ் பண்ண ரவி மோகன் வாங்கிக் கொடுத்த வீடு; அதன் மதிப்பு இத்தனை கோடியா?
Recommended image2
ரவி மோகனை பணம் காய்க்கும் மரமாக்கிய மாமியார் - தயாரிப்பாளர் சொன்ன ஷாக்கிங் தகவல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved