MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரவி மோகனை பணம் காய்க்கும் மரமாக்கிய மாமியார் - தயாரிப்பாளர் சொன்ன ஷாக்கிங் தகவல்

ரவி மோகனை பணம் காய்க்கும் மரமாக்கிய மாமியார் - தயாரிப்பாளர் சொன்ன ஷாக்கிங் தகவல்

திருமணத்திற்குப் பிறகு ரவி மோகனை ஆர்த்தியும் அவரது மாமியாரும் அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக தயாரிப்பாளர் கூறி இருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
| Updated : May 12 2025, 01:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ravi Mohan family dispute
Image Credit : Google

Ravi Mohan family dispute

நடிகர் ரவி மோகனின் விவாகரத்து மற்றும் அவரின் புது காதல் பற்றிய பேச்சுகள் தான் தமிழ் சினிமா உலகில் தற்போது ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. ஆர்த்தியுடனான விவாகரத்தும், அதைத் தொடர்ந்து கெனிஷா உடனான ரவி மோகனின் உறவு பெரும் கவனத்தை ஈர்த்தன. இப்போது, ​​அனைத்திற்கும் காரணம் ஆர்த்தியின் தாய் சுஜாதா விஜயகுமார் என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறுகிறார். ரவி மருமகனாக இல்லாமல், பணம் காய்க்கும் மரமாகவே பார்க்கப்பட்டதாக பாலாஜி பிரபு கூறி இருக்கிறார்.

24
ரவி மோகனை கொடுமைப்படுத்திய மாமியார்
Image Credit : Google

ரவி மோகனை கொடுமைப்படுத்திய மாமியார்

பாலாஜி பிரபு கூறியதாவது : ஆர்த்தியுடனான திருமணத்திற்குப் பிறகு, ரவியை அவர்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். ரவி என்ன சாப்பிட வேண்டும், என்ன செய்ய வேண்டும், எப்போது தூங்க வேண்டும், எழுந்திருக்க வேண்டும் என்று கூட கட்டுப்படுத்தினார்கள் என்பதை அறிய முடிந்தது. எங்கு சென்றாலும், ஆர்த்தி, ரவியை கண்காணிக்க ஒருவரை வைத்திருப்பார். இதெல்லாம் நடந்த உண்மை. மாமியார் மருமகளுடன் சண்டையிடுவதை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இங்கே ஒரு மருமகனை மாமியார் கொடுமைப்படுத்தினார்.

Related Articles

Related image1
2வது திருமணம் செய்துகொண்டாரா ரவி மோகன்? காட்டுத்தீ போல் பரவும் போட்டோ
Related image2
தந்தை என்பது பட்டப்பெயர் இல்ல; ரவி மோகனின் புது உறவால் டென்ஷன் ஆன ஆர்த்தி ரவி
34
ரவி மோகனுக்கு சம்பளம் இல்லை
Image Credit : Google

ரவி மோகனுக்கு சம்பளம் இல்லை

ரவிக்கு சொந்தமாக வங்கிக் கணக்கு கூட இல்லை. கூண்டில் அடைக்கப்பட்ட கிளியைப் போல இருந்தார் ரவி. ஒரு மனிதன் பொறுத்துப் பொறுத்து முன்னேறுவான். ஆனால் அவன் ஒரு முறை எழுந்து நின்றால் எல்லாம் முடிந்துவிடும். அதுதான் இங்கே நடந்தது. திரையுலகில் யாருடைய முகத்திலும் சுஜாதா விஜயகுமார் நேராகப் பார்ப்பதில்லை. எல்லோரும் தனக்குக் கீழே இருப்பது போன்ற பாவனை அவருக்கு. மருமகனை வைத்து பணம் சம்பாதிக்கப் பார்த்தார். அவர் தயாரித்த படத்திற்கு ரவிக்கு சம்பளம் இல்லை. செலவுக்குக் கூட பணம் கொடுக்க மாட்டார்.

44
ரவி மோகனை ஏடிஎம் ஆக பயன்படுத்தினார்கள்
Image Credit : Google

ரவி மோகனை ஏடிஎம் ஆக பயன்படுத்தினார்கள்

சுருக்கமாகச் சொன்னால், பணம் காய்க்கும் மரமாகவே ரவி மோகனைப் பார்த்தார். மருமகனாக அவரைப் பார்க்கவே இல்லை. ஏடிஎம் இயந்திரமாகவே பார்த்தார். ஆர்த்தியைத் திருமணம் செய்ய வேண்டாம் என்று அவரது அப்பா, ரவியிடம் சொல்லியிருந்தார். ஆனால் காதல் காரணமாக, அவரைத் திருமணம் செய்து கொள்ள ரவி முடிவு செய்தார். அம்மாவின் பேச்சைக் கேட்டே ஆர்த்தி இதையெல்லாம் செய்தார் என பல பகீர் தகவல்களை பாலாஜி பிரபு வெளியிட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜெயம் ரவி
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆதாரத்தோடு வந்து நின்ற கார்த்திக்! ஆடிப்போன சந்திரகலா.. சாமுண்டீஸ்வரி முகத்தில் சந்தோஷம்! கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image2
வயித்துல இருக்குற குழந்தையை நினைச்சு உருகும் ரோகிணி - கார்த்திகை தீபம் உருக்கமான கட்டம்!
Recommended image3
விஜய் முன்னே ரஷ்மிகாவிடம் ரக்ஷித் ஷெட்டி குறித்து கேள்வி – வைரலான ரியாக்ஷன் வீடியோ
Related Stories
Recommended image1
2வது திருமணம் செய்துகொண்டாரா ரவி மோகன்? காட்டுத்தீ போல் பரவும் போட்டோ
Recommended image2
தந்தை என்பது பட்டப்பெயர் இல்ல; ரவி மோகனின் புது உறவால் டென்ஷன் ஆன ஆர்த்தி ரவி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved