MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தந்தை என்பது பட்டப்பெயர் இல்ல; ரவி மோகனின் புது உறவால் டென்ஷன் ஆன ஆர்த்தி ரவி

தந்தை என்பது பட்டப்பெயர் இல்ல; ரவி மோகனின் புது உறவால் டென்ஷன் ஆன ஆர்த்தி ரவி

ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், பாடகி கெனிஷாவுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வெளியாகின. இதையடுத்து ஆர்த்தி தனது குழந்தைகளின் நலனுக்காக மௌனம் கலைத்து அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

3 Min read
Ajmal Khan
Published : May 09 2025, 09:31 PM IST| Updated : May 09 2025, 09:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
ஜெயம் ரவி டூ ரவி மோகன்

ஜெயம் ரவி டூ ரவி மோகன்

ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரவி, இதனை தொடர்ந்து தனது பெயரை ஜெயம் ரவி என மாற்றிக்கொண்டார். எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தனி ஒருவன், பேராண்மை உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முக்கிய கதாநாயகனாக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் தனது மனைவி ஆர்த்தியை பிரிய போவதாக ரவி அறிக்கை வெளியிட்டிருந்தார். இது அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து தனதை பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டார். 
 

28
பாடகி கெனிஷா உடன் ரவி மோகன்

பாடகி கெனிஷா உடன் ரவி மோகன்

ஆர்த்தியிடம் இருந்து விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ரவி மோகன், பாடகி கெனிஷா உடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியானது ஆனால் இதனை அவர் மறுத்து வந்தார். இந்த நிலையில் இன்று பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தா திருமண விழாவில் பட்டு வேட்டி சட்டையில் பாடகி கெனிஷா உடன் ரவி கலந்து கொண்டார். இரண்டு பேரும் கை கோர்த்துபடி சென்றனர். இந்த காட்சிகள் வெளியான நிலையில் அதிர்ச்சி அடைந்த ஆர்த்தி ரவி கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Related Articles

Related image1
2வது திருமணம் செய்துகொண்டாரா ரவி மோகன்? காட்டுத்தீ போல் பரவும் போட்டோ
Related image2
எனக்கு எந்த ஆசையும் இல்ல, இமயமலைக்கு போய் செட்டிலாகியிடுவேன்: ரவி மோகன்!
38
ஆர்த்தி ரவியின் கடுமையான அறிக்கை

ஆர்த்தி ரவியின் கடுமையான அறிக்கை

அதில், என் மௌனத்தை கலைக்கிறேன், என் குழந்தைகளுக்காக... கடந்த ஒரு வருடமாக மௌனத்தை ஒரு விரதமாகவே மேற்கொண்டு வருகிறேன்.... இதற்கு காரணம் நான் பலகீனமானவள் என்பது அல்ல. என் பேச்சை விட என்குழந்தைகளின் அமைதியான வாழ்க்கை மிகவும் முக்கியம் எனக்கருதியதால் தான் அந்த விரதம். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள்,

பழிச்சொற்கள், வசைகள் அனைத்தையும் மௌனமாகவே தாங்கிக்கொண்டேன். என் பக்கம் உண்மையும் நியாயமும்இருந்தும் நான் பேசாமல் இருந்ததற்கு காரணம் என் குழந்தைகளுக்கு தந்தை மற்றும் தாய் இருவரிடையே யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதுதான்.

48
தன் பொறுப்புகளில் இருந்தும் கைகழுவி சென்று இருக்கிறார்

தன் பொறுப்புகளில் இருந்தும் கைகழுவி சென்று இருக்கிறார்

இன்றைக்கு உலகம் கூர்ந்து பார்க்கும் காட்சிகளும், நாடகங்களும் வேறு, நடந்த உண்மை என்பது முற்றிலும் வேறு. எங்கள் விவாகரத்து வழக்கு இன்னும் சட்டபூர்வமாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் 18 வருடங்களாக நான் காதலுடனும், நம்பிக்கையுடனும் கைகோர்த்து நடந்த ஒரு மனிதன் என் கைகளை மட்டுமல்ல தன் பொறுப்புகளில் இருந்தும் கைகழுவி சென்று இருக்கிறார்.

பல மாதங்களாக அந்தக் குழந்தைகளின் பொறுப்பை என் தோள்களில் மட்டுமே சுமந்து கொண்டிருக்கிறேன். யாரும் அறியாமல் அந்தக் குழந்தைகள் சிந்தும் கண்ணீரையும் என்கைகள் தான் துடைத்துக்கொண்டிருக்கிறது. 
 

58
பணத்தாசை பிடித்தவள் போல் சித்தரிக்கிறார்கள்

பணத்தாசை பிடித்தவள் போல் சித்தரிக்கிறார்கள்

இன்று அவர் புதிதாக முளைத்தவர்களுடன் புதியதொரு உறவை உருவாக்கி கொண்டதால் பழைய உறவு இப்பொழுது வெறும் செங்கல் சுவர் போல அவர் கண்களுக்குகாட்சியளிக்கிறது. என் குழந்தைகளுக்கு அன்பும் அக்கறையும் கொடுப்பேன் என்ற அவரது வாக்குறுதியும் பறந்துவிட்டது. ஆனால் இன்றும் என்னை தான் பணத்தாசை பிடித்தவள் போல் சித்தரிக்கிறார்கள்.

அது மட்டும் உண்மை என்றால் இப்பொழுது அனைத்தையும் இழந்து நிற்கும் இந்த நிலையில் இல்லாமல் நான் சுயநலத்துடன் எப்பொழுதோ எனது பாதுகாப்பை கவனித்திருப்பேன். ஆனால் கணக்குபோட்டு வாழ்வதைவிட காதலுடன் வாழ்வது சிறந்தது என்றுநான் முடிவெடுத்ததால் தான் இன்று இந்த நிலையில்நிற்கிறேன்.

68
எடுக்கப்படாத தொலைபேசி அழைப்புகள்,நிராகரிக்கப்பட்ட சந்திப்புகள்

எடுக்கப்படாத தொலைபேசி அழைப்புகள்,நிராகரிக்கப்பட்ட சந்திப்புகள்

இன்றும் அந்த காதலுக்காக நான் வருத்தப்படவில்லை. ஆனால் அது பலவீனமாக புரிந்து கொள்ளப்படுவதை தான்தாங்க முடியவில்லை. இன்று என் குழந்தைகளுக்கு முறையே 10 மற்றும் 14 வயதாகிறது....

அவர்களுக்கு பொருளாதார ரீதியானபாதுகாப்பும், உறுதியும் மிகமுக்கியம். இன்று நடந்துகொண்டிருக்கும் சட்டவிவகாரங்களை புரிந்துகொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம் ஆனால் கைவிடப்பட்டதன் வலி அவர்களுக்கு கண்டிப்பாக தெரியும். எடுக்கப்படாத தொலைபேசி அழைப்புகள்,நிராகரிக்கப்பட்ட சந்திப்புகள், போலி சமாதான வாக்குறுதிகள் இவை அனைத்தும் காயங்களாக எங்கள் நெஞ்சில் இருக்கிறது.
 

78
அப்பா என்பது உறவுமட்டுமல்ல அது ஒரு உயர்ந்த பொறுப்பு.

அப்பா என்பது உறவுமட்டுமல்ல அது ஒரு உயர்ந்த பொறுப்பு.

இன்று நான் ஒரு மனைவியாகவோ, அல்லது குற்றச்சாட்டுகளை சுமந்து நிற்கும் ஒரு பெண்ணாகவோ பேசவில்லை... தன் குழந்தைகளின் நலனை காக்க நினைக்கும் தாயாக மட்டுமே குரல் எழுப்புகிறேன். நான் இதை செய்ய தவறினால் நானும் அவர்களை கைவிட்டதாகிவிடும். இன்று உங்கள் நிலையை நீங்கள் உயர்த்திக்கொள்ளலாம், உங்கள் பெயரை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம் ஆனால் உண்மையை மாற்ற முடியாது. அப்பா என்பது உறவுமட்டுமல்ல அது ஒரு உயர்ந்த பொறுப்பு.

இன்று எங்கள் வாழ்க்கையில் குறுக்கே வந்தவர்களால் என் குழந்தைகளின் உடல் மன ஆரோக்கியம் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது அவர்கள் சிந்தும் கண்ணீர் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. என் வார்த்தைகளை நீங்கள் தவிர்க்கலாம் ஆனால் அந்த எதிரொலிக்கு நீங்கள் செவிசாய்த்து தான் ஆக வேண்டும்.

88
முன்னாள் மனைவி என்று அடையாளப்படுத்த வேண்டாம்

முன்னாள் மனைவி என்று அடையாளப்படுத்த வேண்டாம்

எங்களை உற்றுப் பார்ப்பவர்களுக்கும், எங்களின் நலன் விரும்பிகள் என்று அடையாளம் காட்டிக்கொள்பவர்களுக்கும் ஒன்று, இன்றும் எனது இன்ஸ்டாகிராம் ஐடி ஆர்த்திரவி என்ற பெயரில் தான் உள்ளது.சட்டம் முடிவு செய்யும் வரை அது அப்பெயரிலேயே நீடிக்கும். அன்புள்ள ஊடகவியலாளர்களுக்கு என்னை நீங்கள் அவரது முன்னாள் மனைவி என்று அடையாளப்படுத்த வேண்டாம்.

அந்த முடிவை சட்டம் எடுக்கும் வரை அமைதி காப்போம். இப்பொழுதும் பழிவாங்கவோ பரபரப்புக்காகவோ நான்பேசவில்லை என் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காகவே போராடுகிறேன். இன்றும் உங்களை அப்பா என்று அழைக்கும் அந்த இருமகன்களுக்காக என்கண்ணீரை, கதறல்களை, கசப்பான அனுபவங்களை மறைத்துக்கொண்டு போல மேலும் மேலும் உயர்ந்துஎழுகிறேன் என ஆர்த்தி பதிவிட்டுள்ளார். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
சினிமா
தமிழ் சினிமா
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved