MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • படம் அட்டர் பிளாப்... ஆனாலும் தயாரிப்பாளர் ஹாப்பி! 10 மடங்கு லாபம் ஈட்டி தந்த இளையராஜாவின் ஒரே பாட்டு

படம் அட்டர் பிளாப்... ஆனாலும் தயாரிப்பாளர் ஹாப்பி! 10 மடங்கு லாபம் ஈட்டி தந்த இளையராஜாவின் ஒரே பாட்டு

இளையராஜா இசையமைத்த மாஸ்டர் பீஸ் பாடல் ஒன்றின் மூலம் தயாரிப்பாளர் ஒருவர் 10 மடங்கு லாபம் பார்த்த கதையை பற்றி பார்க்கலாம்.

1 Min read
Author : Ganesh A
Published : Aug 16 2024, 12:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ilaiyaraaja

Ilaiyaraaja

ரசிகர்களால் இசைக் கடவுள் என கொண்டாடப்படுபவர் இளையராஜா. அவரது பாடல்கள் தான் இன்றைக்கும் பலரது பிளேலிஸ்டை ஆக்கிரமித்து உள்ளன. அந்த அளவுக்கு ஆயிரக்கணக்கான ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார் இளையராஜா. அன்றைய காலகட்டத்தில் இளையராஜா இருந்தாலே அப்படத்தை விநியோகஸ்தர்கள் போட்டிபோட்டு வாங்கி வெளியிடுவார்கள். பெரும்பாலான படங்களை காப்பாற்றியதும் இளையராஜாவின் பாடல்கள் தான்.

24
isaignani ilaiyaraaja

isaignani ilaiyaraaja

அப்படி இளையராஜாவின் பாடல் மூலம் லாபம் ஈட்டிய படம் பற்றி தான் தற்போது பார்க்க உள்ளோம். அந்த படத்தின் பெயர் அவதாரம். இப்படத்தில் நடிகர் நாசர் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ரேவதி நடித்த இப்படம் கடந்த 1995-ம் ஆண்டு திரைக்கு வந்தது. இப்படத்தை இயக்கியதும் நடிகர் நாசர் தான். அவர் இயக்கிய முதல் படம் இதுவாகும். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி அட்டர் பிளாப் ஆனது.

இதையும் படியுங்கள்... முதல் நாளிலேயே சூப்பர்ஸ்டார் படத்தின் வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய டிமாண்டி காலனி 2

34
Ilaiyaraaja's Thendral Vandhu Theendum Podhu song

Ilaiyaraaja's Thendral Vandhu Theendum Podhu song

அந்த காலகட்டத்திலேயே ரூ.46 லட்சம் நஷ்டமடைந்ததாம். அப்போதைய சூழலில் இது மிகப்பெரிய தொகையாகும். ஆனாலும் அப்படத்தின் தயாரிப்பாளர் சந்தோஷமாக இருந்தாராம். அதற்கு காரணம் அப்படத்தின் பாடல் தான். அது வேறெதுவுமில்லை ‘தென்றல் வந்து தீண்டும் போது’ பாடல் தான். அப்பாடலை இளையராஜாவே பாடியும் இருந்தார். அவரது குரல் அப்பாடலுக்கு கூடுதல் பலம் சேர்த்தது. அப்பாடல் முதலில் நாசருக்கு பிடிக்கவில்லையாம்.

44
avatharam movie

avatharam movie

பின்னர் வேண்டா வெறுப்பாக படத்தில் வைத்தாராம். அதுதான் அப்படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபத்தை ஈட்டி கொடுத்திருக்கிறது. அப்பாடலுக்காக மட்டுமே அப்படத்தின் கேசட்டுகளை வாங்கியவர்கள் ஏராளம். அப்போது அவதாரம் படத்தின் பாடல்கள் அடங்கிய கேசட்டுகள் மட்டும் சுமார் 20 லட்சம் எண்ணம் விற்பனை ஆனதாம். அந்த கேசட் விற்பனை மூலம் தயாரிப்பாளருக்கு கிடைத்த ஷேர் தொகை மட்டும் ரூ.1.6 கோடியாம். 

இதையும் படியுங்கள்... ஒரே ஒரு பொய்! நடிகை மீனாட்சியை திட்டம் போட்டு தீர்த்து கட்டிய நண்பர்கள்! பதற வைக்கும் Flash Back!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இளையராஜா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Demonte Colony 3: பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்கும் அருள்நிதி! 50 கோடியில் சாதனை படைத்த டிமாண்டி காலனி 3!
Recommended image2
Vijay Movie: எந்த தடையும் போடமுடியாது.! விஜய் படம் பொங்கலுக்கு ரிலீஸ்.! தெறிக்கவிடப்போகும் தளபதி ரசிகர்கள்.!
Recommended image3
அறைக்குள்ளேயே ஒரு மாதம் முடங்கிய செம்பருத்தி நாயகி.! ஷபானா விவரிக்கும் 'அன்டோல்ட் ஸ்டோரி'!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved