முதல் நாளிலேயே சூப்பர்ஸ்டார் படத்தின் வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய டிமாண்டி காலனி 2
அஜய் ஞானமுத்து இயக்கிய டிமாண்டி காலனி 2 திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்து உள்ளது.
Demonte Colony 2
ஆகஸ்ட் 15ந் தேதி சுதந்திர தினத்தன்று சியான் விக்ரமின் தங்கலான் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆன திரைப்படம் டிமாண்டி காலனி 2. இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2015ம் ஆண்டு ரிலீஸ் ஆகி மாபெரும் ஹிட் அடித்தது. டிமாண்டி காலனி படத்தின் அதிரிபுதிரியான வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவெடுத்தனர். ஆரம்பத்தில் இப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் உதவி இயக்குனர் தான் இயக்குவதாக இருந்தது.
Demonte Colony 2 Arulnithi
பின்னர் விக்ரமை வைத்து கோப்ரா படத்தை இயக்கி படுதோல்வியை சந்தித்த அஜய் ஞானமுத்து, அதில் இருந்து எப்படியாவது மீண்டு வர வேண்டும் என்பதால் டிமாண்டி காலனி 2 படத்தை தானே இயக்குவதாக அறிவித்தார். இப்படத்திலும் அருள்நிதி தான் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கும் இப்பட்டத்தில் பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... விக்ரம் போட்ட உழைப்புக்கு இந்த வசூல் எல்லாம் ரொம்ப கம்மி... தங்கலான் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
Demonte Colony 2 Box Office
டிமாண்டி காலனி 2 திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. தங்கலான் படத்துக்கு போட்டியாக வெளிவந்த இப்படத்துக்கு முதல் நாளில் கம்மியான தியேட்டர்களே கிடைத்தன. ஆனாலும் படம் பட்டாசாய் இருப்பதாக விமர்சனங்கள் வந்துள்ளதால், இரண்டாம் நாளில் இருந்து அப்படத்திற்கான காட்சிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. அதுமட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் டிமாண்டி காலனி 2 திரைப்படம் தரமான சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.
demonte colony 2 beats Lal Salaam
இப்படம் நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.2.76 கோடி வசூலித்து உள்ளது. இதன்மூலம் ரஜினி படத்தின் வசூல் சாதனையை டிமாண்டி காலனி 2 முறியடித்து உள்ளது. இந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த லால் சலாம் திரைப்படம் முதல் நாளில் ரூ.2.73 லட்சம் மட்டுமே வசூலித்திருந்த நிலையில், அதைவிட கூடுதலாக 3 லட்சம் வசூலை வாரிக்குவித்து டிமாண்டி காலனி 2 திரைப்படம் தரமான சாதனை படைத்து இருக்கிறது.
இதையும் படியுங்கள்... கஜினி ரகசியம்: 12 முன்னணி நடிகர்கள் நிராகரித்த கனவுக்கதை!