ஒரே ஒரு பொய்! நடிகை மீனாட்சியை திட்டம் போட்டு தீர்த்து கட்டிய நண்பர்கள்! பதற வைக்கும் Flash Back!
கடந்த 2012-ஆம் ஆண்டு மும்பையையே கதிகலங்க வைத்த பாலிவுட் நடிகை மீனாட்சி தாபர் மரணம் குறித்த, பிளாஷ்பேக் கதையை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
Meenakshi Thapar Missing Complaint
ராணுவ வீரரான மீனாட்சி தாபரின் சகோதரர், மார்ச் 16, 2012-ஆம் ஆண்டு மும்பையில் உள்ள அம்போலி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளிக்கிறார். அதில் தன்னுடைய தங்கையை யாரோ சிலர் கடத்தி விட்டதாகவும், தன்னுடைய தாயாருக்கு போன் செய்து ஒன்றரை கோடி பணம் கேட்டு அவர்கள் மிரட்டுவதாக தெரிவித்தார். மேலும் அவர்களின் பேச்சை மீறி போலீசில் புகார் கொடுத்தால், தன்னுடைய தங்கைக்கு போதை மருந்து கொடுத்து, அவரை உடை இல்லாமல் போட்டோ எடுத்து அதனை வெளியிடுவேன் என்று அந்த நபர் மிரட்டுவதாகவும் தெரிவித்திருந்தார். எனவே நீங்கள் தான் என் தங்கையை காப்பாற்ற வேண்டும் என அந்த அண்ணன் போலீஸிடம் மன்றாடினார்.
Meenakshi Thapar Brother Complaint
பதட்டமாக இருந்த அந்த நபரை ஆசுவாசப்படுத்திய போலீசார், நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? உங்கள் தங்கை தொலைந்து போய் மூன்று நாட்கள் ஆன பின்னர், மிகவும் தாமதமாக புகார் கொடுக்க என்ன காரணம்? என கேட்டுள்ளனர். அதுக்கு அந்த இளைஞர், "நான் உத்தரகாண்டில் இருந்து வருவதாகவும், ராணுவத்தில் வேலை பார்ப்பதால் வாரத்துக்கு இரண்டு முறை தான் வீட்டுக்கு போன் செய்வேன்.நேற்று நான் போன் செய்த போது தான் என் அம்மா இந்த விஷயத்தை அழுதபடி கூறியதாக தெரிவித்தார்".
தமிழ் பெண்ணுடன் காதல் திருமணம்... நடிகர் மோகன்லாலின் அடிபொலி லவ் ஸ்டோரி தெரியுமா?
Meenakshi Thapar Debut 404 Movie
அந்த நபரின் தங்கை குறித்து போலீசார் விசாரித்த போது, "என்னுடைய தங்கைக்கு சிறுவயதில் இருந்தே நடிகையாக வேண்டும் என ஆசை. எனவே உத்தரகாண்டில் இருந்து மும்பைக்கு வந்து கஷ்டப்பட்டு நடிகையானார் என்பதையும் தெரிவிக்கிறார்". இவர் கடத்தப்பட்டதாக கூறிய அவரின் தங்கை தான் நடிகை மீனாட்சி தாபர். 2011 ஆம் ஆண்டு வெளியான 404 திரைப்படத்தின் மூலம் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். குறிப்பாக 2012ல் நடிகை கத்ரினா கைப்புடன் இணைந்து ஒரு படத்திலும் நடிக்க இருந்தார். அந்த படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தபோது தான் இப்படி ஒரு சம்பவம் நடந்தது.
Meenakshi Thapar Kidnaped
நடிகை மீனாட்சி, தன்னுடைய அம்மா - அப்பாவை விட்டு பல கிலோமீட்டர் தூரம் தள்ளி இருந்தாலும், தினமும் அவர்களுக்கு போன் செய்து பேசுவது வழக்கம். வழக்கம் போல் மார்ச் 13ஆம் தேதி, மீனாட்சியிடம் பேச அவருடைய அம்மா போன் செய்தபோது மீனாட்சி அவரின் போனை எடுக்கவில்லை. சூட்டிங் காரணமாக அவரால் எடுக்க முடியவில்லை என நினைத்து, அவருடைய அம்மா தன்னுடைய மற்ற பணிகளை கவனிக்க தொடங்கினார். பின்னர் மீனாட்சி செல்போனில் இருந்தே ஒரு கால் அவருக்கு வந்துள்ளது. தன்னுடைய மகள் தான் போனில் அழைக்கிறார் என, அந்த போனை எடுத்து காதில் வைத்த மீனாட்சியின் அம்மாவுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. மறுமுனையில் மீனாட்சியின் போனில் பேசிய ஒரு நபர், மீனாட்சி கடத்தி விட்டதாகவும் ஒன்றரை கோடி ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே அவரை விடுவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு மீனாட்சியின் அம்மா தன்னிடம் ரூ.30 ஆயிரம் மட்டுமே இருப்பதாகவும், அதை வைத்துக்கொண்டு மகளை விட்டு விடும்படி அழுது கதறி உள்ளார். ராஜ குடும்பத்தில் பிறந்த உன்னிடம் ஒன்றரை கோடி இல்லையா? என அந்த நபர் பேசிவிட்டு போனை கட் செய்துள்ளார். பின்னர் அந்த போன் சுவிட்ச் ஆஃப் ஆகி உள்ளது.
Police Investigation
போலீசார் மீனாட்சியின் போன் கடைசியாக எங்கு சுவிட்ச் ஆஃப் ஆனது என தேடிய போது, அலகாபாத்தில் ஸ்விட்ச் ஆஃப் ஆனதை கண்டு பிடித்தனர். மீனாட்சி ஏன் மும்பையின் இருந்து அலகாபாத்துக்கு போனார்? என பலரும் குழம்பிக் கொண்டிருந்த நிலையில், மீனாட்சியின் நண்பர் ஒருவரிடம் விசாரித்த போது போலீசாருக்கு ஒரு லீடு கிடைத்துள்ளது. அதன்படி மீனாட்சி ஆடிஷன் விஷயமாக அலகாபாத் போக உள்ளதாக அவரிடம் சொன்னதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து கடைசியாக மீனாட்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து யாருடன் கிளம்பினார் என போலீசார் விசாரித்த போது. அமித் ஜெயஸ்வால் மற்றும் ப்ரீத்தி சுரேன் ஆகியோருடன் கிளம்பி சென்றது தெரிய வந்தது.
Police Find criminals
இந்த அமித் ஜெயஸ்வால் மற்றும் ப்ரீத்தி சுரேன் இருவருமே மிகக் குறுகிய காலத்தில் நடிகை மீனாட்சிக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களாக மாறியவர்கள். மீனாட்சி போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனா அதே லோகேஷனில் தான் இவர்கள் இருவருடைய போனும் ஸ்விட்ச் ஆஃப் ஆனது போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அலகாபாத் போலீஸ் உதவியுடன், மீனாட்சி பற்றிய ஏதாவது தகவல் கிடைக்குமா என போலீசார் காத்திருந்தபோது, ஏடிஎம் ஒன்றில் மீனாட்சியின் அக்கவுண்டில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது. அதன் சிசிடிவி கேமராவை செக் செய்த போது அதை பயன்படுத்தியது அமித் ஜெயஸ்வால் மற்றும் ப்ரீத்தி சுரேன் என்பது தெரிய வரவே, தகுந்த ஆதாரத்துடன் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து தங்களின் விசாரணை வலயத்திற்குள் கொண்டு வருகிறார்கள்.
இதை மட்டும் ஜெயலலிதாவால் கட்டுப்படுத்தவே முடியாதாம்! சந்தோஷமா இருந்தால் என்ன செய்வாங்க தெரியுமா?
Police Investigating Amit Jaiswal and Preeti Suri
ஆரம்பத்தில் இருவரும், எங்களுக்கு திருமணம் ஆக உள்ளதை மீனாட்சியிடம் கூறிய போது... அவர்தான் பணம் தேவை பட்டால் எடுத்துக்கொள்ளும் படி, தன்னுடைய கிரெடிட் கார்டு மற்றும் வாலட்டை தங்களிடம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரின் பேச்சிலும் சில சந்தேகங்கள் போலீசுக்கு எழுந்ததால், போலீசின் பாணியில் இருவரையும் விசாரித்த போது, அவர்கள் கூறிய உண்மை நெஞ்சையே பதறவைத்தது.
Amit Jaiswal Plan
மீனாட்சி தபார் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண் என்றாலும், தன்னை வசீகரமாக வைத்துக் கொள்வதிலும், விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்துவதிலும், தன்னை பகட்டாக காட்டிக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். தான் ஒரு நடுத்தர வீட்டுப் பெண் என்று தெரிந்தால் தன்னை நண்பர்கள் குறைத்து மதிப்பிடுவார்கள் என எண்ணி, தன்னை ஒரு நேபாளில் உள்ள ராஜ வம்சத்தை சேர்ந்த பெண் என தன்னுடைய நண்பர்களிடம் இவர் கூறியுள்ளார். எனவே அமித் ஜெயஸ்வால் மற்றும் ப்ரீத்தி சுரேன் இருவரும் எப்படியும் இவரை கடத்தினால் மிகப்பெரிய தொகை கைக்கு வரும். அதை கொண்டு நாம் வெளிநாட்டிற்கு தப்பி சென்று விடலாம் என திட்டம் போட்டு மீனாட்சியை கடத்தி உள்ளனர்.
'தங்கலான்' படத்தை இந்த 5 காரணங்களுக்காக கண்டிப்பாக பார்க்கவேண்டும்!
Meenakshi Revel Truth
ஆனால் மீனாட்சியின் அம்மா தன்னிடம் 30 ஆயிரம் மட்டுமே பணம் இருப்பதாக கூறியது அவர்களுக்கு ஏற்கனவே சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், மீனாட்சியின் அக்கவுண்ட்டினை செக் செய்த போது அதில் சில ஆயிரம் பணம் மட்டுமே இருந்துள்ளது. எனவே மீண்டும் மீனாட்சியிடம் இது குறித்து விசாரித்த விசாரிக்க, அவர் தான் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் என்பதை தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் இனி இவளை வெளியே விட்டால், அது மிகப் பெரிய பிரச்சனையாகிவிடும் என எண்ணி ஒரே அடியாக தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளனர்.
Meenakshi Thapar Murdered
அதன்படி மண்டையில் அடிபட்டு மயக்க நிலையில் இருந்த நடிகை மீனாட்சியின் என் கழுத்தை தனியாக வெட்டி எடுத்து, உடலை இரண்டு துண்டுகளாக வெட்டி உள்ளனர். பின்னர் அடி பாகத்தை அங்கு இருந்த ஒரு செப்டிக் டேங்கில் போட்டு மூடிவிட்டு, தலையை உத்தரகாண்ட் செல்லும் வழியில் உள்ள ஒரு புதர் ஒன்றில் பேருந்தில் இருந்த படியே தூக்கி எரித்துள்ளனர். மற்ற பாகங்களையும் அங்கங்கே தூக்கி இருந்துள்ளனர். இந்த விவகாரம் 2012- மற்றும் 2013 ஆம் ஆண்டு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. பகட்டுக்காக சொன்ன ஒரு பொய் ஒரு உயிரையே பறித்தது என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணமாகவே இன்று வரை பார்க்கப்பட்டு வருகிறது.