'ரகு தாத்தா' படத்தில் கதையின் நாயகியாக ஜெயித்தாரா கீர்த்தி சுரேஷ்? விமர்சனம் இதோ..!
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம், பெரிய பட்ஜெட் படங்களுடன் போட்டியிட்டு, விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்று வருகிறது. ஹாமலோ ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை, தி ஃபேமிலி மேன் புகழ் சுமன் குமார் இயக்கியுள்ளார்.
நடிகை நயன்தாராவுக்கு அடுத்தபடியாக கதையின் நாயகியாக நடிக்கும் வேடங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சுமார் 500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் 'ரகு தாத்தா'.
விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள தங்கலான் மற்றும் அருள்நிதி நடிப்பில் வெளியாகி உள்ள டிமான்டி காலனி 2, என இரண்டு பெரிய படங்களோடு வெளியாகி உள்ள இந்த படத்திற்கு குறைந்த அளவிலான தியேட்டர்களே கிடைத்திருந்தாலும், விமர்சன ரீதியாக தற்போது பாராட்டுகளை பெற்று வருகிறது ரகு தாத்தா திரைப்படம்.
இந்த படத்தை தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் மேன் மூலம் பிரபலமான கதாசிரியர் சுமன் குமார் இயக்கி உள்ளார். மேலும் கே ஜி எஃப், சலார், காந்தாரா போன்ற பிக் பட்ஜெட் படங்களை தயாரித்து மிக குறுகிய காலத்தில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக உயர்ந்துள்ள ஹாமலோ ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, ஒய் யாமினி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹிந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் எம்எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ஆனந்த் சாமி, ரவீந்திர விஜய், போன்ற பலர் நடித்துள்ளனர். தற்போது வெளியாகி உள்ள இந்த படம் குறித்த ரசிகர்களின் விமர்சனத்தை பார்ப்போம்.