'தங்கலான்' படத்தை இந்த 5 காரணங்களுக்காக கண்டிப்பாக பார்க்கவேண்டும்!
விக்ரம் - பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியுள்ள, 'தங்கலான்' படத்தி அவசியம் ரசிகர்கள் திரையரங்கிற்கு சென்று பார்க்க வேண்டியதன் 5 காரணங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
Pa Ranjith
ஒவ்வொரு முறையும் தன்னுடைய புதுமையான கதை சொல்லலால், ரசிகர்களை வியக்க வைத்து வரும் இயக்குனர் பா ரஞ்சித், முதல்முறையாக நடிகர் சீயான் விக்ரமுடன் இணைந்து பணியாற்றியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுமார் 800-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகி உள்ள இந்த படத்தை ரசிகர்கள் ஏன் திரையரங்கில் பார்க்க பார்க்க வேண்டும்? என்பதற்கான ஐந்து காரணங்களை இந்த பதிவின் மூலம் தெறித்து கொள்வோம்.
Vikram
விக்ரம்:
தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும், உயிரை பணையம் வைக்கும் அளவுக்கு ரிஸ்க் எடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் விக்ரம். 'ஐ' படத்திற்கு பின்னர், சீயான் அதிக மெனக்கெடலையும், உடலை வருந்தியும் 'தங்கலான்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விக்ரமின் கதாபாத்திரம் 'தங்கலான்' என்கிற பழங்குடியின அரசனாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பழங்குடியாக நடித்துள்ள விக்ரம் இப்படத்திற்காக, ஒவ்வொரு நாளும் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை மேக்கப்புக்காக நேரம் ஒதுக்கி உள்ளார். அதை கலைப்பதற்காக 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை ஒதுக்கியுள்ளார். இவருடைய உழைப்புக்காகவே இந்த படத்தை கண்டிப்பாக ரசிகர்கள் திரையரங்கில் பார்க்க வேண்டும்.
சமந்தாவால்... மாமியார் வீட்டில் சோபிதாவுக்கு வந்த பிரச்சனை! நாகார்ஜுனா போட்ட கண்டிஷன்!
Periodic Flim
பீரியாடிக் கதைக்கலாம்:
ஒரு பீரியாடிக் களம் கொண்ட படத்தை இந்த காலத்தில் தத்ரூபமாக செட் அமைத்து எடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏற்கனவே பா.ரஞ்சித் 80-களில் இருந்த சென்னை பகுதியை சார்பட்டா படத்தின் மூலம் கண் முன் நிறுத்தினார். இதை தொடர்ந்து, தங்கம் பிரித்தெடுக்கும் முக்கிய இடமான கோலார் தங்க வயலின் நிஜ வாழ்க்கை பின்னணியில் இந்த படத்தின் காட்சிகளை செதுக்கி உள்ளார். பிரிட்டிஷ் ஆச்சியின் கீழ், அங்கு வாழ்ந்த உள்ளூர் பழங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் மற்றும் அவர்களிடம் இருந்து பறிக்கப்படும் வளங்களை இப்படம் ரசிகர்கள் கண் முன் நிறுத்தியுள்ளது 'தங்கலான்'. எனவே பீரியாடிக் படங்களை விரும்பும் ரசிகர்கள் கண்டிப்பாக மிஸ் பண்ண கூடாத படம் இது.
Parvathy Thiruvothu
பார்வதி திருவோத்து:
பார்வதி திருவோத்து, இந்த படத்தில் 'தங்கலான்' அரசனாக வரும் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக கங்கம்மா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாக அந்த கதாபாத்திரமாகவே மாறி உள்ளார். தன்னுடைய படங்களில் அதிக அளவு கவர்ச்சி காட்டாத பார்வதி, கங்கம்மா வேடத்திற்காக ஜாக்கெட் போடாமல் நடித்துள்ளார். எனவே 'மரியான்' படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் பார்வதியின் கதாபாத்திரம் அதிகம் பேசப்படும் என கூறப்படுகிறது.
மயோசிட்டிசால் திரையுலகில் இருந்து விலக நினைத்த சமந்தா.! மீட்டெடுத்த 5 விஷயங்கள்..!
Malavika Mohanan
மாளவிகா மோகனன்:
இதுவரை மாடர்ன் பெண்ணாகவே பல படங்களில் பார்க்கப்பட்ட மாளவிகா மோகனன், 'தங்கலான்' படத்திற்காக சூனியகாரியாக நடித்துள்ளார். விக்ரமை போல் இவரின் கதாபாத்திரத்தின் மேக்கப்புக்கும் பல மணி நேரங்கள் எடுத்து கொண்டது என்பதை அவரே கூறியும் இருந்தார். அதே போல் இந்த படத்திற்காக சிலம்பம் போன்ற பயிற்சிகளையும் மாளவிகா கற்று கொண்டார். எனவே மாளவிகாவின் அவந்திகா அவதாரமும் பெரிய திரையில் ரசிக்க வேண்டிய ஒன்று.
GV Prakash Kumar
ஜிவி பிரகாஷ்:
'தங்கலான்' படத்தில் நடிகர்களின் நடிப்பு, இயக்குனரின் கதை சொல்லல், தத்ரூபமான செட் போன்றவற்றிற்கு அடுத்தபடியாக உள்ளது. ஜிவி பிரகாஷின் இசை தான். ஏற்கனவே பல படங்களில் தன்னுடைய தன்னிகரற்ற இசையால் பல ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ள ஜிவி பிரகாஷ், முதல் முறையாக ஒரு பீரியாடிக் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இவருடைய இசை ஏற்கனவே அதிகம் பேசப்படும் ஒன்றாக மாறியது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற மினுக்கி மினுக்கி பாடல், தங்கலான் வார் போன்ற பாடல்களில் ஜிவி பிரகாஷ் தன்னுடைய உணர்வுபூர்வமான இசையால் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். மேலும் இப்படத்தின் BGM-ல்ல வழக்கமான மேஜிக்கை காட்டியுள்ளார். எனவே இந்த ஐந்து காரணங்களுக்காக கண்டிப்பாக திரையரங்கில் ரசிகர்கள் இப்படத்தை பார்க்கலாம்.
அருள்நிதி நடிப்பில் வெளியாகியுள்ள 'டிமான்டி காலனி 2'..! திகில் மூட்டியதா? திரைப்பட விமர்சனம்!