- Home
- Cinema
- ஷூட்டிங்கே முடியல அதற்குள் விற்பனையான ராஜமௌலி படத்தின் ஓடிடி உரிமம் - தட்டிதூக்கியது யார்?
ஷூட்டிங்கே முடியல அதற்குள் விற்பனையான ராஜமௌலி படத்தின் ஓடிடி உரிமம் - தட்டிதூக்கியது யார்?
ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு, பிருத்விராஜ் நடிக்கும் SSMB29 என்கிற பிரம்மாண்ட திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை முன்னணி ஓடிடி தளம் கைப்பற்றி உள்ளதாம்.

SSMB29 OTT deal
பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியின் புதிய படம் 'SSMB29'. இந்திய சினிமாவே மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படங்களில் இதுவும் ஒன்று. இப்படத்தை பற்றி தயாரிப்பாளர்களோ அல்லது இயக்குனரோ அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. இருந்தாலும், சீரான இடைவெளியில் படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படம், இந்திய சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜமெளலி பட ஓடிடி உரிமையை கைப்பற்றியது யார்?
தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின்படி, படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே ஓடிடி உரிமைகள் விற்பனையாகிவிட்டதாம். இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை எந்த ஒரு படத்திற்கும் கிடைத்திராத மிகப்பெரிய ஓடிடி பிசினஸ் இப்படத்திற்கு நடந்துள்ளதாம். இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் கைப்பற்றி இருக்கிறதாம். இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக ராமோஜி ஃபிலிம் சிட்டியில் 50 கோடி ரூபாய் செலவில் வாரணாசி நகரத்தையே தத்ரூபமாக செட் போட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாரணாசியின் புனித நகரத்தின் கட்டங்கள் மற்றும் தெருக்களை செட்டாக அமைத்து அதில் முக்கிய ஆக்ஷன் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
வாரணாசி நகரத்தையே செட் போட்ட ராஜமெளலி
வாரணாசியில் படப்பிடிப்பு நடத்துவதில் உள்ள நடைமுறை சவால்கள் காரணமாக, ராஜமௌலி இந்த பிரம்மாண்ட செட்டை உருவாக்க முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 'பாகுபலி', 'ஆர்ஆர்ஆர்' போன்ற படங்களில் பிரம்மாண்ட படங்களை இயக்கிய இயக்குனர் ராஜமெளலி, 'SSMB29' இல் அதே பாணியை கடைபிடித்து வருகிறாராம்.. படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒடிசாவில் படப்பிடிப்பு முடிந்த பிறகு, ஹைதராபாத்தில் உள்ள இந்த வாரணாசி செட்டில் முக்கிய காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரிகிறது.
SSMB29 பட ரிலீஸ் எப்போது?
ஜூலையில் மகேஷ் பாபு மற்றும் பிரியங்கா சோப்ராவுடன் கென்யாவின் காட்டுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் மூலம் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பிரியங்கா சோப்ரா இந்திய சினிமாவிற்கு திரும்புகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'SSMB29' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிக்க நடிகர் விக்ரமையும் படக்குழுவினர் அணுகினார்கள். ஆனால் சில காரணங்களால் இதில் நடிக்க மறுத்துவிட்டாராம் விக்ரம். இப்படத்தை 2027-ம் ஆண்டு மார்ச் மாதம் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம்.