- Home
- Gallery
- அடுத்த படம்.. ரெடியான ராஜமௌலி.. கைகோர்க்கும் மகேஷ் பாபு - இணைப்போகும் தென்னிந்திய நடிகர்! வெறித்தனம் லோடிங்!
அடுத்த படம்.. ரெடியான ராஜமௌலி.. கைகோர்க்கும் மகேஷ் பாபு - இணைப்போகும் தென்னிந்திய நடிகர்! வெறித்தனம் லோடிங்!
S.S Rajamouli : இன்னும் நேரடியாக தமிழ் திரைப்படங்களை இயக்கவில்லை என்றாலும், கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இயக்குனர் தான் ராஜமௌலி.

junior ntr
கடந்த 2001ம் ஆண்டு வெளியான "ஸ்டூடன்ட் நம்பர் ஒன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தெலுங்கு சினிமாவில் களமிறங்கிய இயக்குனர் தான் ராஜமௌலி. கடந்த 23 ஆண்டுகளாக டோலிவுட் உலகில் பயணித்து வருகிறார்.
Magadheera
ஏற்கனவே இவர் இயக்கத்தில் வெளியான "மகதீரா", "ஈகா", "பாகுபலி" மற்றும் "ரத்தம் ரணம் ரௌத்திரம்" போன்ற திரைப்படங்கள் உலக சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் அவர் தனது அடுத்த பட பணிகளை விரைவில் அவர் துவங்க உள்ளார்.
mahesh babu
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஜமவுலி அவர்களே வெளியிட்டுள்ள நிலையில், பிரபல தெலுங்கு திரையுலக நடிகர், டோலிவுட் உலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு அவர்களை இந்த முறை இயக்கவிருக்கிறார் ராஜமௌலி.
prithviraj
மேலும் இந்த திரைப்படத்தில் பிரபல தென்னிந்திய நடிகரும், இயக்குனருமான பிரித்விராஜ் சுகுமாரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அவர் தெலுங்கு திரை உலகில் நடித்த "சலார்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறியது.
யோகி பாபு செய்த பரிகாரம் என்ன? வைத்தீஸ்வரன் கோயிலில் பக்தி பரவசமாக பிரார்த்தனை!