MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • லியோ படத்தில் நடிக்க அழைத்த லோகேஷ்... வேண்டவே வேண்டாம்னு திருப்பி அனுப்பிய சாய் பல்லவி - ஏன் தெரியுமா?

லியோ படத்தில் நடிக்க அழைத்த லோகேஷ்... வேண்டவே வேண்டாம்னு திருப்பி அனுப்பிய சாய் பல்லவி - ஏன் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் லியோ படத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 14 2023, 03:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகை சாய் பல்லவி, மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பிரேமம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மலர் டீச்சராக வந்து இளசுகளின் மனதை கொள்ளையடித்தார். இப்படத்தின் வெற்றிக்கு சாய் பல்லவியின் நடிப்பும் முக்கிய காரணமாக அமைந்தது. இதையடுத்து தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்த அவர், மாரி 2, என்.ஜி.கே., தியா போன்ற படங்களில் நடித்தார்.

24

தமிழில் சாய் பல்லவிக்கு பெரியளவில் வெற்றி கிடைக்காததால், தெலுங்கில் நடிக்கத் தொடங்கினார். அங்கு இவர் நடித்த படமெல்லாம் வேறலெவலில் ஹிட் ஆனதால் குறுகிய காலத்திலேயே டோலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக உயர்ந்தார் சாய் பல்லவி. இதையடுத்து பல்வேறு பெரிய நடிகர்களுடன் நடிக்க வந்த வாய்ப்புகளையும் அசால்டாக நோ சொல்லி திருப்பி அனுப்பிவிடுகிறாராம் சாய்பல்லவி.

இதையும் படியுங்கள்... விஜய்யின் ஹேர்ஸ்டைலை கிண்டலடித்தவர்களுக்கு தரமான பதிலடி... பிறந்தநாளில் லோகேஷ் செய்த வேறலெவல் சம்பவம்

34

சாய் பல்லவியை பொறுத்தவரை படத்தில் தனக்கு வெயிட்டான கதாபாத்திரம் இருந்தால் தான் நடிப்பேன் என்கிற பாலிசியை கடைபிடித்து வருகிறாராம். இதனால் அவர் இழந்த பட வாய்ப்புகள் ஏராளம் என சொல்கிறார். சமீபத்தில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு படத்தில் மஞ்சு வாரியர் நடித்த கேரக்டரில் முதலில் சாய் பல்லவியை தான் நடிக்க வைக்க திட்டமிட்டார்களாம். ஆனால் அவர் அந்த கேரக்டர் வெயிட்டாக இல்லை என சொல்லி நடிக்க மறுத்துவிட்டாராம்.

44

அதேபோன்று தற்போது விஜய்யின் லியோ படத்திலும் சாய் பல்லவி நடிக்க மறுத்துள்ள சம்பவம் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. லியோ படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க முதலில் சாய் பல்லவியை தான் அணுகினாராம் லோகேஷ், ஆனால் அவரோ பெரிய அளவில் ஸ்கோப் இல்லை எனக்கூறி நடிக்க மறுத்துவிட்டாராம். இதையடுத்து தான் திரிஷாவை கமிட் செய்திருக்கிறார் லோகேஷ்.

பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களில் ஹீரோயின்களுக்கு பெரிய அளவில் ஸ்கோப் இருக்காது. லியோ படத்திலும் அதே பார்முலாவை தான் லோகேஷ் பின்பற்றியுள்ளார் என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சாய் பல்லவி நடிக்க மறுத்ததை பார்த்தால் இந்த படத்தில் திரிஷாவுக்கு டம்மி ரோல் தானா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... காஷ்மீரில் பிரபலங்களுடன் களைகட்டிய லோகேஷ் கனகராஜ் பார்த் டே பார்ட்டி..! வைரலாகும் போட்டோஸ்..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
லோகேஷ் கனகராஜ்
சாய் பல்லவி
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
டாக்ஸிக் படத்திற்காக யாஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Recommended image2
ஏத்திவிட்ட மீனா... குதிரைக் கொம்பாக நிற்கும் கோமதி; மனம் இறங்கினாரா பாண்டியன்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image3
வெளிய போடி... அறிவுக்கரசியை அடிச்சு துரத்திவிட்ட கதிர் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் எதிர்பாரா திருப்பம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved