MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய்யின் ஹேர்ஸ்டைலை கிண்டலடித்தவர்களுக்கு தரமான பதிலடி... பிறந்தநாளில் லோகேஷ் செய்த வேறலெவல் சம்பவம்

விஜய்யின் ஹேர்ஸ்டைலை கிண்டலடித்தவர்களுக்கு தரமான பதிலடி... பிறந்தநாளில் லோகேஷ் செய்த வேறலெவல் சம்பவம்

லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் எடுத்த மாஸான கேண்டிட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 14 2023, 02:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் அறிமுகமான இவர், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் எலைட் இயக்குனர்கள் லிஸ்ட்டில் இணைந்துவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் லியோ. இப்படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்து வருகிறார். மாஸ்டர் படத்துக்கு பின் இருவரும் இணைந்துள்ள படம் என்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

24

லியோ படத்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதற்காக படக்குழுவினர் அனைவரும் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து காஷ்மீருக்கு கடந்த ஜனவரி மாத இறுதியில் சென்றனர். அங்கு இரண்டு மாதங்கள் ஷூட்டிங்கை முடித்துவிட்டு வருகிற மார்ச் 25-ந் தேதி அனைவரும் சென்னைக்கு திரும்ப உள்ளனர். தற்போது காஷ்மீரில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இதையும் படியுங்கள்... பணம் கொடுத்து ஆஸ்கர் விருது வாங்கியதா ஆர்.ஆர்.ஆர்? ஒரே பதிவால் சர்ச்சையை கிளப்பிய பிரபலம்

34

லியோ படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார். இவர் சமீபத்தில் தான் படப்பிடிப்பில் இணைந்தார். இவர் ஷூட்டிங்கிற்காக காஷ்மீர் வந்தபோது எடுத்த வீடியோவையும், அவர் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் சமீபத்தில் வெளியிட்டு இருந்தனர். அதில் விஜய்யின் ஹேர்ஸ்டைலை பார்த்த நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வந்தனர். இதுகுறித்து பல்வேறு மீம்களும் போடப்பட்டு வந்தன.

44

இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய்யுடன் லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த கேண்டிட் புகைப்படத்தை பதிவிட்டு, அனைத்திற்கும் நன்றி அண்ணா என பதிவிட்டு இருந்தார். லோகேஷ் கனகராஜ் பதிவிட்ட அந்த புகைப்படத்தில் விஜய் வெள்ளைநிற உடையில், செம்ம மாஸாக காட்சியளிக்கிறார். 

இந்த புகைப்படம் வேறலெவலில் இருப்பதாகவும் அனைவரும் கமெண்ட் செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு விஜய்யின் ஹேர்ஸ்டைலை ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் லோகேஷ் இப்படி ஒரு மாஸான புகைப்படத்தை பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளதாக தெரிகிறது.

இதையும் படியுங்கள்... பாடகி அனிதா குப்புசாமிக்கு பிறந்த ஆண் குழந்தை... டாக்டர்கள் செய்த தவறால் ஒரே நாளில் உயிரிழந்த பரிதாபம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
லோகேஷ் கனகராஜ்
தளபதி விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கணவர் தந்த மலடி பட்டம்... விவாகரத்துக்கு பின் பிறந்த குழந்தை - நடிகை ரேவதியின் கண்ணீர் கதை
Recommended image2
மீம் கிரியேட்டர்களின் கடவுள்.. வடிவேலுவுக்கு ஆடி கார் முதல் BMW கார் வரை.. இத்தனை கோடி சொத்துக்கள் உள்ளதா?
Recommended image3
விஜயாவுக்கு விபூதியடித்த நீத்து... மனோஜை ஆள் வைத்து ஏமாற்றிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved