பணம் கொடுத்து ஆஸ்கர் விருது வாங்கியதா ஆர்.ஆர்.ஆர்? ஒரே பதிவால் சர்ச்சையை கிளப்பிய பிரபலம்
பணம் கொடுத்ததால் தான் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததாக பிரபலம் ஒருவர் போட்டுள்ள பதிவு சர்ச்சையை கிளப்பி உள்ளது
ராஜமவுலி இயக்கத்தில் கடந்தாண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் நாயகனாக நடித்திருந்த இப்படத்திற்கு மரகதமணி என்கிற கீரவாணி இசையமைத்து இருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் வேறலெவலில் ஹிட் ஆனது. குறிப்பாக நாட்டு நாட்டு பாடல் உலகளவில் ரீச் ஆனது. இதன் காரணமாக இப்பாடல் ஆஸ்கர் விருதுக்கும் நாமினேட் ஆகி இருந்தது.
இப்பாடல் ஆஸ்கர் விருது வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், எதிர்பார்த்தபடியே நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்று சாதனை படைத்தது நாட்டு நாட்டு பாடல். இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் அப்பாடலுக்கு பாடல் வரிகளை எழுதிய சந்திரபோஸ் ஆகியோருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள்... இதுக்கு போய் ஆஸ்காரா... 80 கோடி செலவு பண்ணிதான் வாங்கிருக்காங்க! விமர்சனங்களுக்கு விளக்கம் தந்த ஜேம்ஸ் வசந்தன்
ஆஸ்கர் விருது வென்ற கீரவாணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும், மறுபக்கம் இவர்கள் காசு கொடுத்து தான் இவ்விருதை வாங்கி இருப்பதாக குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட்டில் முன்னணி மேக்கப் கலைஞராக இருக்கும் ஷான் முட்டாதில் என்பவர் ஆர்.ஆர்.ஆர் படக்குழு ஆஸ்காரை காசு கொடுத்து தான் வாங்கி இருப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
அதில அவர் பதிவிட்டிருப்பதாவது : “ஹாஹாஹா இது மிகவும் வேடிக்கையாக உள்ளது. இந்தியாவில் மட்டும் தான் விருதை காசு கொடுத்து வாங்குவார்கள் என நினைத்திருந்தேன். ஆனால் தற்போது ஆஸ்கரிலுமா. பணம் இருந்தால் எதையும் வாங்கிவிட முடியும், ஆஸ்கரையும் கூட” என நக்கலாக பதிவிட்டு இருந்தார். அவரின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஷான் முட்டாதில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் மேக்கப் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... இளையராஜாக்கு போட்டியா இறக்கிவிடப்பட்ட 2 குதிரைகளும் ஆஸ்கர் அடிச்சிருச்சு! ARR, கீரவாணிக்கு இப்படிஒரு ஒற்றுமையா