சண்டை போட்ட நயன்தாரா? மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பில் என்ன பிரச்சனை?
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வந்த மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஷூட்டிங்கில் நடிகை நயன்தாரா சண்டை போட்டதாக தகவல் பரவி வருகிறது.

Mookuthi Amman 2 Movie Update : நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் ஆடை சம்பந்தமான ஒரு விஷயத்தில் நடிகை நயன்தாராவுக்கும் உதவி இயக்குனருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாரா படப்பிடிப்பு தளத்தில் இருந்து கோபித்துக்கொண்டு சென்றதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. ஆனால், தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் உடனடியாக தலையிட்டு சமரசம் செய்து நயன்தாராவுடனான பிரச்சனையை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
Mookuthi Amman 2 Issue
பேச்சுவார்த்தையின் முடிவில் பொள்ளாச்சி ஷெட்யூலை ரத்து செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதற்கு பதிலாக, சென்னையில் உள்ள ஆலப்பாக்கத்தில் இருக்கும் பொன்னியம்மன் கோவிலில் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். தற்காலிக தடை ஏற்பட்டாலும், பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் விரைவில் நசரத்பேட்டையில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது சென்னையில் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்... மூக்குத்தி அம்மன் 2 படத்துக்காக மகன்களுடன் விரதம் இருக்கும் நயன்தாரா!
Mookuthi Amman 2 Movie Team
பெரிய நடிகர்கள் பட்டாளத்துடன் இந்த மாத தொடக்கத்தில் படத்தின் பூஜை நடந்தது. சுந்தர் சி படத்தை இயக்குகிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்தின் முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி இருந்தார். இப்படம் ஓடிடியில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால், இரண்டாம் பாகத்தை தான் இயக்க மாட்டேன் என ஆர்.ஜே.பாலாஜி ஏற்கனவே கூறியதை அடுத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கும் பொறுப்பு சுந்தர் சி-க்கு சென்றது.
Mookuthi Amman 2 Nayanthara
மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை சுமார் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார் சுந்தர் சி. இப்படத்தில் நயன்தாரா உடன் இனியா, ரெஜினா கசெண்ட்ரா, மைனா நந்தினி, துனியா விஜய், சிங்கம் புலி, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்தில் அம்மனாக நடிக்க நடிகை நயன்தாரா, ஒரு மாதத்திற்கு மேல் விரதம் இருந்து நடித்து வருகிறார். இப்படடத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார்.
இதையும் படியுங்கள்... மூக்குத்தி அம்மன் 2 : நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் சுந்தர் சி - ஆத்தாடி இத்தனை கோடியா?