MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மூக்குத்தி அம்மன் 2 : நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் சுந்தர் சி - ஆத்தாடி இத்தனை கோடியா?

மூக்குத்தி அம்மன் 2 : நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் சுந்தர் சி - ஆத்தாடி இத்தனை கோடியா?

நயன்தாரா நடிப்பில் உருவாக உள்ள மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இயக்குனர் சுந்தர் சி அதிக சம்பளம் வாங்கி இருக்கிறாராம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 12 2025, 10:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மூக்குத்தி அம்மன் 2 இயக்குனர் சுந்தர் சி

மூக்குத்தி அம்மன் 2 இயக்குனர் சுந்தர் சி

தமிழ் சினிமாவில் தற்போது டாப் கியரில் சென்றுகொண்டிருக்கும் இயக்குனர் என்றால் அது சுந்தர் சி தான். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த அரண்மனை 4 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது. கடந்த ஆண்டின் முதல் வெற்றிப் படமும் இதுதான். இதையடுத்து இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக, சுந்தர் சி இயக்கி நீண்ட காலம் கிடப்பில் போடப்பட்டு இருந்த மதகஜராஜா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் விஷால் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் தான் இந்த ஆண்டு பொங்கல் ரிலீஸ் படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாகும்.

24
சுந்தர் சி கைவசம் உள்ள படங்கள்

சுந்தர் சி கைவசம் உள்ள படங்கள்

தொடர் வெற்றிகளால் உற்சாகத்தில் இருக்கும் சுந்தர் சி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். தற்போது அவர் கைவசம் கேங்கர்ஸ் திரைப்படம் உள்ளது. இப்படத்தில் சுந்தர் சி உடன் வடிவேலுவும் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதுதவிர மூக்குத்தி அம்மன் 2, கலகலப்பு 3 மற்றும் விஷால் உடன் ஒரு படம் என சுந்தர் சி-யின் லைன் அப் நீண்டு கொண்டே செல்கிறது. இதில் அவர் இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் தான் முதலில் தொடங்க உள்ளது.

இதையும் படியுங்கள்... துளியும் மேக்கப் போடாமல் ஷாப்பிங் வந்த தமன்னா! ஷாக் ஆன ரசிகர்கள்

34
சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா

சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா

இப்படத்தின் முதல் பாகத்தில் அம்மனாக நடித்த நயன்தாரா தான் அதன் இரண்டாம் பாகத்திலும் ஹீரோயினாக நடிக்க உள்ளார். இப்படத்தை வேல்ஸ் பிலிம் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தை சுமார் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார்களாம். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மார்ச் மாதம் முதல் இப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்க உள்ளனர். இந்நிலையில், இப்படத்தை இயக்க சுந்தர் சி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

44
சுந்தர் சி சம்பளம்

சுந்தர் சி சம்பளம்

மதகஜராஜா, அரண்மனை 4 என அடுத்தடுத்து இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளதால் சம்பளத்தை மளமளவென உயர்த்திவிட்டாராம் சுந்தர் சி. அதன்படி மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்க அவருக்கு ரூ.20 கோடி சம்பளமாக வழங்கப்பட உள்ளதாம். இது இப்படத்தின் நாயகி நயன்தாரா கூட ரூ.12 கோடி தான் சம்பளமாக வாங்குகிறார். ஆனால் அவரை விட சுந்தர் சி-க்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டு இருக்கும் தகவல் கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... மீண்டும் பயோபிக்கில் நடிக்கும் மாதவன்...இப்போ யார் கதை தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மூக்குத்தி அம்மன் 2
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆதாரத்தோடு வந்து நின்ற கார்த்திக்! ஆடிப்போன சந்திரகலா.. சாமுண்டீஸ்வரி முகத்தில் சந்தோஷம்! கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image2
வயித்துல இருக்குற குழந்தையை நினைச்சு உருகும் ரோகிணி - கார்த்திகை தீபம் உருக்கமான கட்டம்!
Recommended image3
விஜய் முன்னே ரஷ்மிகாவிடம் ரக்ஷித் ஷெட்டி குறித்து கேள்வி – வைரலான ரியாக்ஷன் வீடியோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved