கிடப்பில் போட்ட படங்களை தூசிதட்டும் கவுதம் மேனன்! துருவநட்சத்திரத்தை தொடர்ந்து உயிர்பெறும் விஜய் நடிகரின் படம்
துருவ நட்சத்திரம் படத்தின் பணிகளை இயக்குனர் கவுதம் மேனன் விறுவிறுப்பாக மேற்கொண்டு வரும் நிலையில், கிடப்பில் போடப்பட்ட அவரின் மற்றொரு படமும் விரைவில் உயிர்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் கவுதம் மேனன், தற்போது பிசியான நடிகராகிவிட்டார். இவர் நடிப்பில் அண்மையில் மைக்கேல் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இதையடுத்து தற்போது லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதேபோல் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் பத்து தல படத்திலும் முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார் கவுதம்.
இவ்வாறு பிசியான நடிகராக வலம் வருகிறார் கவுதம் மேனன். அவர் இயக்கிய ஏராளமான படங்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக தூசி தட்டி எடுத்து வருகிறார் கவுதம். அந்த வகையில் சமீபத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படத்தின் பேட்ச் ஒர்க் பணிகளை முடித்து, அதனை ரிலீசுக்கு தயார் படுத்தி வருகின்றனர். சில மாதங்களில் அப்படம் ரிலீசாக வாய்ப்பு உள்ளது.
இதையும் படியுங்கள்... துணிவு முதல் டாடா வரை... இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் களமிறங்கும் திரைப்படங்களின் அப்டேட்
இந்நிலையில், கவுதம் மேனன் கிடப்பில் போட்ட மற்றுமொரு படமும் உயிர்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இப்படத்தில் அருண் விஜய் நடித்த விக்டர் என்கிற வில்லன் கதாபாத்திரத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து விக்டர் என்கிற படத்தை தொடங்க திட்டமிட்டிருந்தாராம் கவுதம் மேனன்.
பின்னர் அந்தப் படம் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. அந்த படத்தை தான் தற்போது மீண்டும் இயக்கும் முடிவுக்கு வந்துள்ளாராம் கவுதம் மேனன். அநேகமாக அருண் விஜய்யின் அடுத்த படமாக விக்டர் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர கவுதம் மேனன் இயக்கத்தில் பிக்பாஸ் பிரபலம் வருண் நடித்த ஜோஷ்வா என்கிற திரைப்படமும் பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... நிலநடுக்கத்தால் துருக்கியில் மனித உடல்கள் மீது வீடுகள் குடியேறிவிட்டன... கவிதை மூலம் கண்ணீர் சிந்திய வைரமுத்து