- Home
- Cinema
- துணிவு முதல் டாடா வரை... இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் களமிறங்கும் திரைப்படங்களின் அப்டேட்
துணிவு முதல் டாடா வரை... இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் களமிறங்கும் திரைப்படங்களின் அப்டேட்
தமிழ் சினிமாவில் வருகிற பிப்ரவரி 10-ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாக உள்ள திரைப்படங்கள் என்னென்ன என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

தியேட்டரில் வெளியாகும் தமிழ் படங்கள்
தமிழ் சினிமாவில் பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் 7 படங்கள் ரிலீஸ் ஆன நிலையில், இந்த வாரம், அதாவது வருகிற பிப்ரவரி 10-ந் தேதி இரண்டு படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆக உள்ளன. அதன்படி கவின் நடித்த டாடா திரைப்படம் வருகிற பிப்ரவரி 10-ந் தேதி வெளியாக உள்ளது. கணேஷ் கே பாபு இயக்கியுள்ள இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்திருக்கிறார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.
அதேபோல் பிப்ரவரி 10-ந் தேதி ரிலீஸாக உள்ள மற்றொரு தமிழ் படம் வசந்த முல்லை. இப்படத்தில் பாபி சிம்ஹா நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை காஷ்மிரா பர்தேசி நடித்துள்ளார். ரமணன் புருசோத்தமா இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் ஆர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்... லியோ படத்தில் இருந்து திரிஷா விலகியதாக பரவும் தகவல்... வேறு வழியின்றி உண்மையை போட்டுடைத்த நடிகையின் தாய்
ஓடிடி-யில் ரிலீசாகும் தமிழ் படங்கள்
இந்த வாரம் ஓடிடியில் ஒரே ஒரு தமிழ் படம் தான் ரிலீஸ் ஆகி உள்ளது. அது அஜித் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீசாகி வெற்றிபெற்ற துணிவு படம் தான். எச்.வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, மோகனசுந்தரம் ஆகியோர் நடிப்பில் ரிலீசாகி ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம் இன்று பிப்ரவரி 8-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாகி உள்ளது.
ஓடிடி-யில் ரிலீசாகும் மற்ற மொழி படங்கள்
கன்னடத்தில் வேதா என்கிற திரைப்படம் ஜீ5 ஓடிடியில் ரிலீசாக உள்ளது. இந்தியில் விஜய் சேதுபதி நடித்த ஃபர்ஸி என்கிற வெப்தொடர் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. அதேபோல் நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோ லவ் ஷாதி டிராமா என்கிற பெயரில் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. தெலுங்கில் ஹண்ட் என்கிற திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. அதேபோல் மலையாளத்தில் நிவின் பாலி நடித்த மஹாவீர்யார் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும், நடிகை ரேவதி இயக்கிய சலாம் வெங்கி என்கிற இந்தி படம் ஜீ5 ஓடிடியிலும் ரிலீசாக உள்ளன.
இதையும் படியுங்கள்... பாலிவுட் நடிகையுடன் காதல்... மாலத்தீவில் மஜாவாக நடக்கபோகிறதா பிரபாஸின் நிச்சயதார்த்தம்? வெளியான ஷாக்கிங் தகவல்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.