பாலிவுட் நடிகையுடன் காதல்... மாலத்தீவில் மஜாவாக நடக்கபோகிறதா பிரபாஸின் நிச்சயதார்த்தம்? வெளியான ஷாக்கிங் தகவல்
பாகுபலி நாயகன் பிரபாஸ் பாலிவுட் நடிகையை காதலித்து வருவதாகவும், அவர்கள் இருவருக்கும் மாலத்தீவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாகவும் தகவல் பரவி வந்தது.
பாகுபலி படம் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்துவிட்டார் பிரபாஸ். இதையடுத்து அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தான் எடுக்கப்பட்டு வருகின்றன. பாகுபலி படத்தின் வெற்றிக்கு பின் பிரபாஸ் நடிப்பில் சாஹோ, ராதே ஷியாம் என இரண்டு பிரம்மாண்ட படங்கள் வெளியாகிவிட்டன. ஆனால் அந்த இரண்டுமே படுதோல்வியை சந்தித்தன. குறிப்பாக கடந்த ஆண்டு வெளிவந்த ராதே ஷியாம் திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் இழப்பை சந்தித்தது.
இப்படி தொடர் தோல்விகளை சந்தித்தாலும், பிரபாஸுக்கு மவுசு குறையவில்லை. அவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் தற்போது ஆதிபுருஷ் என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஓம் ராவத் இயக்கும் இப்படம் ராமயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் பிரபாஸ் ராமனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சீதை கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... திருமண உடையில்... சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி..! வெட்டிங் போட்டோசை பகிர்ந்த நடிகை குவியும் வாழ்த்து!
ஆதிபுருஷ் படப்பிடிப்பின் போது பிரபாஸுக்கு, கீர்த்தி சனோனுக்கு இடையே காதல் ஏற்பட்டதாகவும், அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் செய்திகள் பரவின. ஆனால் நடிகை கீர்த்தி சனோன் இதனை திட்டவட்டமாக மறுத்தார். இதனால் சில மாதங்கள் அடங்கி இருந்த இந்த காதல் சர்ச்சை தற்போது மீண்டும் கிளம்பி உள்ளது. இம்முறை திருமண நிச்சயதார்த்தம் வரை சென்றுவிட்டதாக பாலிவுட்டில் கடந்த சில தினங்களாக ஒரு தகவல் பரவி வந்தன.
அதன்படி பிரபாஸும், கீர்த்தி சனோனும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், அவர்கள் இருவருக்கும் அடுத்த வாரம், அதாவது காதலர் தினத்தை ஒட்டி மாலத்தீவில் வைத்து திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்த செய்தி வைரலான நிலையில், பிரபாஸ் தரப்பு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. பிரபாஸும், கீர்த்தி சனோனும் நெருங்கிய நண்பர்கள் தான் என்றும், அவர்களைப்பற்றி பரவி வரும் தகவல் எதுவும் உண்மையில்லை என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... 80'ஸ் நாயகிகளுடன் இணைந்து 'பதான்' படம் பார்த்த கமல்ஹாசன்..! இளமை துள்ளல் பொங்கும் போட்டோஸ்..!