திருமண உடையில்... சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி..! வெட்டிங் போட்டோசை பகிர்ந்த நடிகை குவியும் வாழ்த்து!
நடிகை கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா இருவரும், தங்களுடைய திருமணம் குறித்த தகவலை வெளிப்படுத்தாத நிலையில், முதல் முறையாக நடிகை கியாரா அத்வானி திருமண புகைப்படத்தை வெளியிட்டு திருமணம் மிகவும் சிறப்பாக நடந்ததை அறிவித்துள்ளார்.
தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில், சாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் கியாரா அத்வானி. தற்போது தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், Shershaah என்கிற படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் தீ பற்றி கொண்டது.
இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், தொடர்ந்து மௌனம் காத்து வந்த இந்த ஜோடி, அவ்வப்போது டேட்டிங்கிற்காக பொது இடங்களுக்கு வந்த போது பல முறை மீடியா கண்களில் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில் தங்களின் காதலை மட்டும் இன்றி திருமண வேலைகளையும் ரகசியமாக செய்து வந்த இந்த ஜோடிக்கு, ராஜஸ்தானில் உள்ள ஜெய் சல்மான் பேலஸில் இன்று திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் இவர்களின் திருமணம் நடைபெறும் இடத்தின் உள்ளே பத்திரிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யாரும் செல்போன், கேமரா போன்றவை உபயோகிக்கவும் தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுவதால் கியாரா - சித்தார்த் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாக வில்லை.
80'ஸ் நாயகிகளுடன் இணைந்து 'பதான்' படம் பார்த்த கமல்ஹாசன்..! இளமை துள்ளல் பொங்கும் போட்டோஸ்..!
இருப்பினும் இவர்களின் திருமணம் நடந்து முடிந்து விட்டதாக... நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியானது மட்டும் இன்றி, இருவரின் விக்கி பீடியா பக்கங்களிலும் கியாராவின் கணவர் சித்தார்த் மல்ஹோத்ரா என்றும் சித்தார்த் மல்ஹோத்ரா மனைவி கியாரா அத்வானி என மாற்றப்பட்டது.
மேலும் கியாரா மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ரசிகர்கள் தொடர்ந்து, இவர்களின் திருமண புகைப்படத்தை பார்க்க காத்திருந்த நிலையில், தற்போது நடிகை கியாரா அத்வானி காதல் கணவர் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் வாழ்த்துக்களை குவித்து வருகிறது.