80'ஸ் நாயகிகளுடன் இணைந்து 'பதான்' படம் பார்த்த கமல்ஹாசன்..! இளமை துள்ளல் பொங்கும் போட்டோஸ்..!
நடிகர் கமல்ஹாசன் 80-களில் முன்னணி நடிகையாக இருந்த சிலருடன் இணைந்து, பதான் திரைப்படம் பார்த்துள்ளார். இது குறித்த சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில், சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பதான்' . ஹாலிவுட் தரத்தில் சண்டை காட்சிகள், மற்றும் வேற லெவல் மேக்கிங்கில் வெளியான இப்படம், வெளியான ஒரே வாரத்தில் உலக அளவில் சுமார் 700 கோடி வசூலித்துள்ளதால், இப்படத்தை பாலிவுட் திரையுல ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
கடைசியாக நடிகர் ஷாருகான் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு 'ஜீரோ' திரைப்படம் வெளியாகி படு மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், 4 வருடங்களுக்கு பின் வெளியான 'பதான்' திரைப்படம்... பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ததோடு, சிறந்த கம் பேக் படமாகவும் அமைந்துள்ளது.
கமல்ஹாசனை பார்க்க திடீர் விசிட் அடித்த பிக்பாஸ் விக்ரமன்.. ஏன் தெரியுமா?
இந்நிலையில் இந்த படம் வெளியான போதே... நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 'பதான்' படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வருவது மகிழ்ச்சி என்றும், இப்படம் வெற்றி பெற தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன் 'பதான்' படத்தை 80'ஸ் நாயகிகளுடன் சேர்ந்து பார்த்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
அதாவது தன்னுடைய அண்ணன் மகளும், 80-களில் முன்னணி நடிகையாக இருந்த சுஹாசினி, நடிகை ஷோபனா மற்றும் ஜெயஸ்ரீ ஆகிய மூவர் தான் கமல்ஹாசனுடன் இந்த படத்தை பார்த்து ரசித்துள்ளனர்.
ஜெயஸ்ரீயுடன் கமல் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இளமை துள்ளலோடு இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். மேலும் நடிகை ஷோபனாவுடன் கமல் 1984ஆம் ஆண்டு வெளியான ‘எனக்குள் ஒருவன்’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீராத முழங்கால் வலி... ஆயுர்வேத சிகிச்சை எடுக்கும் நடிகர் அருண் விஜய்! அவரே வெளியிட்ட புகைப்படங்கள்!