தீராத முழங்கால் வலி... ஆயுர்வேத சிகிச்சை எடுக்கும் நடிகர் அருண் விஜய்! அவரே வெளியிட்ட புகைப்படங்கள்!
அதிரடி ஆக்ஷன் நாயகனாக வலம் வரும் அருண் விஜய், தன்னுடைய முழங்கால் வலிக்காக ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வரும் புகைப்பங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமான நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். ஆரம்பத்தில் திறமை இருந்தும் பட வாய்ப்புகள் அமையாமல் திண்டாடிய அருண் விஜய்க்கு மிகப்பெரிய பிரேக்காக அமைந்தது என்றால் அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில் வில்லனாக நடித்தது.
இந்த படத்திற்கு பின்னர் தரமான படங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார். அந்த வகையில் இவர் நடித்த குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், தடம், மாஃபியா, யானை, சினம் போன்ற படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது.
கையில் குழந்தையோடு ஷாருகான்..! அட இது அட்லீ - பிரியா தம்பதியின் மகனா? வைரலாகும் புகைப்படம்..!
தற்போது பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அருண் விஜய், இயக்குனர் ஏ ல் விஜய் இயக்கத்தில் 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார். ஆக்சன் காட்சிகள் அதிகம் கொண்ட இந்த படத்தில், அருண் விஜய் டூப் எதுவும் பயன்படுத்தாமல் தானே சண்டைக் காட்சிகளில் நடித்து வருவதாக தெரிவித்திருந்தார்.
மேலும் அவ்வபோது இந்த படத்தின் சண்டைக் காட்சிகளில் அருண் விஜய் கீழே விழுந்து அடிபட்ட சம்பவங்களும் உள்ளன. இந்தப் படத்தின் சண்டைக் காட்சியின் போது அருண் விஜய்க்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் உரிய சிகிச்சை எடுத்தும், தொடர்ந்து வலி அதிகமாக இருந்ததால் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருவதாக கூறி அருண் விஜய் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது பாரம்பரிய ஆயுர்வேத முறையில் எனது காயம் பட்ட முழங்காலுக்கு சிகிச்சை அளிப்பதால், மிகவும் நன்றாக உணர்கிறேன். எனது நான்காவது நாள் சிகிச்சையில் உள்ளேன். சிகிச்சை முடிந்து விரைவில் படப்பிடிப்புக்கு திரும்புவேன் என கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் விரைவில் அவர் நலம் பெற வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.