MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஜனனியிடம் சண்டை போடும் சக்தி... குணசேகரன் பிளானில் திடீர் ட்விஸ்ட் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

ஜனனியிடம் சண்டை போடும் சக்தி... குணசேகரன் பிளானில் திடீர் ட்விஸ்ட் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி மற்றும் சக்தியிடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆதி குணசேகரன் பிளானுக்கும் சிக்கல் வந்துள்ளது. இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 25 2026, 08:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ethirneechal thodargiradhu serial today episode
Image Credit : youtube/suntv

Ethirneechal thodargiradhu serial today episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் பெண்களை பழிவாங்க வேண்டும் என்கிற முனைப்போடு இருந்த ஆதி குணசேகரன் தற்போது எமோஷனல் பிளாக்மெயில் செய்யும் நிலைக்கு மாறி இருக்கிறார். அதன் முதல்படியாக தன்னுடைய தம்பிகளான கதிர் மற்றும் ஞானத்தை பிரையின் வாஷ் செய்து அவர்களை, அவர்களின் மனைவிகளோடு மீண்டும் சேர்ந்து வாழ சொல்கிறார். அண்ணனின் பேச்சை தட்டாமல் கேட்கும் கதிரும், ஞானமும் தயங்கித் தயங்கி போய் தங்கள் மனைவிகளான நந்தினி மற்றும் ரேணுகாவிடம் ஃபீல் பண்ணி பேசுகிறார்கள். தாங்கள் திருந்தி விட்டதாக கூறுகிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
எடுபடாத ஆதி குணசேகரன் பிளான்
Image Credit : youtube/suntv

எடுபடாத ஆதி குணசேகரன் பிளான்

ஞானம் வாண்டட் ஆக வந்து தன்னிடம் சமாதானமாக பேசுவதால் ரேணுகாவுக்கு சந்தேகம் வருகிறது. இதனால் அவரின் பேச்சுக்கு வளைந்து கொடுக்காமல், இனிமே நமக்குள் ஒத்து வராது என ஒரே போடாக போட்டு விடுகிறார். மறுபுறம் கதிரும் நந்தினியிடம் நாம் இனிமேல் ஒன்றாக வாழ வேண்டும் என்று சொல்ல, அதைக் கேட்டு ஷாக்கான நந்தினி, தன் பாணியில் கதிருக்கு பதிலடி கொடுத்துள்ளார். உங்க அண்ணன் சொல்லிதான இப்படி எல்லாம் வந்து பேசுறீங்களா என நந்தினி கேட்க, அதெல்லாம் இல்லை நம்ம பொண்ணுக்காக நம்ம சேர்ந்து வாழணும் என முடிவெடுத்து இருப்பதாக கதிர் கூறுகிறார். ஆனால் நந்தினி இதையெல்லாம் நம்ப தயாராக இல்லை.

Related Articles

Related image1
அந்நியனாக இருந்த தம்பிகளை ரெமோவாக மாற்றிய ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Related image2
வெளிய போடி... அறிவுக்கரசியை அடிச்சு துரத்திவிட்ட கதிர் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் எதிர்பாரா திருப்பம்
35
ஃபீல் பண்ணும் சக்தி
Image Credit : youtube/suntv

ஃபீல் பண்ணும் சக்தி

மறுபுறம் தான் அப்பாவாக போகும் குஷியில் இருக்கிறார் சக்தி. தன்னை அப்பா என்று அழைக்க ஒரு குழந்தை வரப் போகிறது என்பதை நினைத்து பார்த்து ஆனந்தக் கண்ணீர் சிந்துகிறார் சக்தி. அதேபோல் தன் காதல் மனைவி ஜனனி தூங்கிக் கொண்டிருக்கும் போது, தன் மனதில் உள்ளவற்றை சொல்லி சந்தோஷப்படுகிறார். குழந்தை பிறக்கப் போகிறது என்கிற சந்தோசம் ஒருபுறம் இருந்தாலும், ஜனனியை டென்ஷன் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என டாக்டர் சொன்ன அட்வைஸும் சக்தியின் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாகவே அவர் அருகிலேயே இருந்து கவனித்துக் கொள்ள முனைப்பு காட்டுகிறார் சக்தி.

45
ஜனனி - சக்தி மோதல்
Image Credit : youtube/suntv

ஜனனி - சக்தி மோதல்

டாக்டர் சொன்னதற்கு எதிர்மாறாகவே ஜனனி செய்து வருகிறார். குறிப்பாக எதையும் மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் இருக்கும்படி டாக்டர் சொல்லி இருந்த நிலையில் ஜனனியோ, ஆதி குணசேகரனின் மாற்றத்தை பற்றி யோசித்து சக்தியிடம் பேசுகிறார். எல்லாத்தையும் பண்ணிட்டு எதுவுமே நடக்காத மாதிரி நார்மலைஸ் பண்ண பார்க்கிறார் உங்க அண்ணன், இதெல்லாம் நியாயமா சக்தி என ஜனனி கேட்க, இப்போ நீ அதைப்பற்றி எல்லாம் யோசிக்காத, ரிலாக்ஸா இரு, டாக்டர் சொன்னது ஞாபகம் இருக்குல்ல, நீ ரொம்ப வீக்கா இருக்க, அது உன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நல்லதில்லை என சொல்ல, அப்போ இதெல்லாம் அப்படியே விட சொல்றியா என ஜனனி கேட்க, இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது.

55
யார் அந்த 2 பேர்?
Image Credit : youtube/suntv

யார் அந்த 2 பேர்?

அந்த நேரம் பார்த்து வீட்டுக்குள் இருவர் வருகிறார். அவர்கள் தன் அண்ணன் ஆதி குணசேகரனை தான் பார்க்க வந்திருப்பார்கள் என நினைத்து கதிரும், ஞானமும் அண்ணனை அழைத்து வரச் சொல்கிறார்கள். ஆனால் அவர்களோ தாங்கள் ஜனனியை பார்க்க வந்திருப்பதாக சொல்ல, நந்தினி, ஜனனியை கீழே அழைத்து வருகிறார். இதையடுத்து என்ன ஆனது? ஜனனியை தேடி வந்திருக்கும் அந்த இரண்டு நபர்கள் யார்? அவர்களால் வெடிக்க போகும் புது பிரச்சனை என்ன? குழந்தை பிறப்பதற்குள் ஜனனியும் சக்தியும் என்னென்ன சண்டையெல்லாம் போட போகிறார்கள்? என்பதை இனிவரும் எபிசோடுகளில் பார்க்கலாம்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : ஜனனிக்காக சக்தி எடுத்த அதிரடி முடிவு.... கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Recommended image2
Siragadikka Aasai : சிந்தாமணியின் முகத்திரையை கிழித்த பைனான்சியர்.... முத்துவின் பிளான் சக்சஸ்
Recommended image3
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Related Stories
Recommended image1
அந்நியனாக இருந்த தம்பிகளை ரெமோவாக மாற்றிய ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
வெளிய போடி... அறிவுக்கரசியை அடிச்சு துரத்திவிட்ட கதிர் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் எதிர்பாரா திருப்பம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved