MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இதெல்லாம் ஏன் கிட்ட வெச்சிக்காத; சவுண்டு கிட்ட சண்டைக்கு போய் கண்ணீர் விட்ட சுனிதா!

இதெல்லாம் ஏன் கிட்ட வெச்சிக்காத; சவுண்டு கிட்ட சண்டைக்கு போய் கண்ணீர் விட்ட சுனிதா!

பிக் பாஸ் வீட்டின் உள்ளே ரீ-என்ட்ரி கொடுத்த சுனிதா, தற்போது சவுந்தர்யாவிடம் கொஞ்சம் காட்டமாக பேசி கண்ணீர் விட்டு அழுத வீடியோ வெளியாகியுள்ளது. 

2 Min read
manimegalai a
Published : Jan 13 2025, 03:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Bigg Boss Tamil season 8 3rd Promo

Bigg Boss Tamil season 8 3rd Promo

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு வாரமே உள்ளதால், நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்தும் விதமாக ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களை, அடுத்தடுத்து உள்ளே அனுப்பி ரணகளம் செய்து வருகிறார் பிக் பாஸ். அந்த வங்கியில் ஏற்கனவே அர்னவ், தர்ஷா குப்தா, வைஷ்ணவி, ரியா, சாச்சனா, ரவீந்த சந்திரசேகரன், உள்ளிட்ட 8 போட்டியாளர்கள் உள்ளே வந்த நிலையில், இன்றைய தினம் தர்ஷிகா, சத்தியா மற்றும் ஜெஃப்ரி ஆகியோர் அடுத்தடுத்து வந்தனர்.

25
Today Tharshika Re -entry in Bigg Boss tamil 8

Today Tharshika Re -entry in Bigg Boss tamil 8

முதல் ப்ரோமோவில் தர்ஷிகா உள்ளே வந்த உடனே, விஷால் கூண்டுக்குள் சிக்கிய கிளி போல் அவரை முறைத்து பார்த்த நிலையில்... தர்ஷிகா மற்றும் ரவீந்தர் இடையே நடந்த சண்டை பரபரப்பாக பார்க்கப்பட்டது. அப்போது நான் விஷாலை டேமேஜ் செய்யவில்லை, அது எனக்கு தப்பா தெரிந்தது என தர்ஷிகா சொன்னதும், நீ வெளியே வேறு மாதிரி பேசினாய், அதனால் தான் விஷாலை எல்லாரும் அடிக்கிறாங்க என ரவீந்தர் காட்டமாக பேச பேசினார். பின்னர் தர்ஷிகா எனக்கு தெரியும் நான் என்ன பண்ணினேன் என்று என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட நீங்கள் யார்? என்பது போல் கத்தி கூச்சல் போட்டார். ரவீந்தரும் தன்னுடைய கோபத்தை காரசாரமாக வெளிப்படுத்தினார். இந்த ப்ரோமோ வெளியாகி அதன் தாக்கமே இன்னும் அடங்குவதற்குள், மற்றொரு பிக்பாஸ் வீட்டுக்குள் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

முறைத்த விஷால்; உள்ளே வந்ததும் சண்டைபோட்ட தர்ஷிகா - களேபரம் ஆன பிக் பாஸ் வீடு
 

35
Sathya and Jeffry Roasted Arnav

Sathya and Jeffry Roasted Arnav

அர்னவ் பிக் பாஸ் வீட்டில் உள்ளே வந்ததும், அங்கு இல்லாத சத்யா மற்றும் ஜெஃப்ரியை மிகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். சத்தியாவை சட்டையே இல்லாமல் ஒருவன் திருத்திக்கொண்டு இருப்பானே அவன் எங்கே? என ஒருமையில் பேசிய நிலையில், இதைத்தொடர்ந்து ஜெஃப்ரியை ஒருத்தன் தடவிகிட்டும்... நோண்டிகிட்டும் இருப்பானே என கேட்டது, நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கே அவர் மீது கோபத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது. குறிப்பாக மற்ற போட்டியாளர்களும் ஜெப்ரி மற்றும் சத்யாவுக்கு சப்போர்ட் செய்து அர்னவ்-விடம் சண்டைக்கு பாய்ந்தனர்.

45
Sathya and Jeffry imitate Arnav

Sathya and Jeffry imitate Arnav

இதற்கு தரமான பதிலடி கொடுக்கும் விதத்தில், பிக் பாஸ் வீட்டிற்குள் ரீ-என்ட்ரி கொடுத்த ஜெஃப்ரி மற்றும் சத்யா இருவரையும் சக போட்டியாளர்கள் அன்பாக வரவேற்ற நிலையில், ஜெஃப்ரி சத்யாவை பார்த்து பட்டனை ஒழுங்காக போடு என கூறி, அர்னவ்-வை வம்பிழுத்தனர். நீ பக்கத்துல தடவாமல் இரு என சத்தியா கூறியதும்,  அர்னவ் வாங்கிய நோஸ் கட்டை பார்த்து துள்ளி குதித்து ரசித்தனர்ஹவுஸ் மெட்ஸ். ஜெஃப்ரி ப்ரோ உங்க சைஸ்க்கு எல்லாம் மரியாதை இல்லை, வயசுக்கு தான் புரியுதா? என கேட்டு 'ஜிங்கிலி ஜிங்கிலி' என பேசி வச்சி செய்தார். 

விஜய் மகன் சஞ்சய்க்கு அஜித் கொடுத்த வாக்கு; படப்பிடிப்பு ஆரம்பமாகும் முன்பே இப்படி ஒரு பிரச்சனையா?

55
Sunitha And Soundharya Fight

Sunitha And Soundharya Fight

இதை தொடர்ந்து தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் சுனிதா என்கிட்ட இதெல்லாம் வெச்சுகாதா என சொல்ல, எதுவும் செய்யாமல் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது என சவுண்டு கொஞ்சம் சவுண்டாக பேச, சுனிதா தான் நன்றாக விளையாடியும் இந்த இடத்தை தவற விட்டதை எண்ணி, நீ எதுவும் செய்யாமல் தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறாய். உனக்கு வெளியில் பல நண்பர்கள், உறவினர் இருப்பார்கள் அவங்க வோட் போடுவாங்க. எனக்கு யார் போடுவா என அழுகிறார். 
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved