முறைத்த விஷால்; உள்ளே வந்ததும் சண்டைபோட்ட தர்ஷிகா - களேபரம் ஆன பிக் பாஸ் வீடு
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ள தர்ஷிகா, உள்ளே வந்ததும் சண்டைபோட்டதால் பரபரப்பு நிலவியது.
Bigg Boss Tamil season 8
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இன்னும் ஆறு நாட்களில் முடிவடைய உள்ளது. இந்நிகழ்ச்சியின் பைனல் இந்த வாரம் நடைபெற உள்ளது. இந்த பைனலுக்கு ரயான், ஜாக்குலின், செளந்தர்யா, முத்துக்குமரன், விஜே விஷால், பவித்ரா ஆகிய ஆறு பேர் சென்றுள்ளனர். இறுதிப்போட்டி வரை செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட அருண் பிரசாத் மற்றும் தீபக் ஆகியோர் கடந்த வார இறுதியில் எலிமினேட் ஆகி வெளியேறினர். இதனால் இந்த சீசனில் யார் டைட்டில் வெல்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
Vishal, Tharshika
இதனிடையே பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் 8 பேர் ரீ எண்ட்ரி கொடுத்தனர். இந்நிகழ்ச்சியை விட்டு முதல் 8 வாரங்களில் எலிமினேட் செய்யப்பட்ட ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, ஷிவக்குமார், சாச்சனா ஆகிய 8 பேர் உள்ளே வந்தனர். அவர்கள் வந்து வெளியுலகில் நடக்கும் விஷயங்களை எக்கச்சக்கமாக லீக் பண்ணியதால், கடுப்பான பிக் பாஸ் அவர்களை அழைத்து வார்னிங் கொடுத்ததோடு, இனி வெளியுலக விஷயங்களை பேசினால் வெளியேற்றிவிடுவேன் என்றும் எச்சரித்தார்.
இதையும் படியுங்கள்... அருண் பிரசாத்துக்கு பிக் பாஸ் அள்ளி கொடுத்த சம்பளம்; ஆத்தாடி இத்தன லட்சமா?
Tharshika Fight With Ravinder
வார இறுதியில் ஆட்டத்தின் போக்கை மாற்றியதற்காக ரவீந்தர் சந்திரசேகரை விஜய் சேதுபதி கண்டித்துப் பேசினார். இப்படி இறுதி வாரத்திலும் சண்டை சச்சரவுகளுடன் சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இன்று முதல் எஞ்சியுள்ள போட்டியாளர்கள் ரீ-எண்ட்ரி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் முதல் ஆளாக உள்ளே வந்தார் தர்ஷிகா. அவரின் எண்ட்ரியை பார்த்ததும் விஷால் அவரை முறைத்து பார்த்தார். ஆனால் தர்ஷிகா சிரித்தபடி வந்து அவருக்கு கைகொடுத்தார்.
Ravinder
பின்னர் உள்ளே சென்ற தர்ஷிகாவை ரவீந்தர் வெளுத்து வாங்கினார். நான் விஷால் பெயரை டேமேஜ் செய்யவில்லை, அது எனக்கு தப்பா தெரிஞ்சது என தர்ஷிகா சொன்னதும், நீ வெளிய ஒன்னு பண்ண, அதனால் தான் எல்லாரும் விஷாலை அடிக்குறாங்க என ரவீந்தர் கறாராக பேசினார். உடனே டென்ஷன் ஆன தர்ஷிகா, எனக்கு தெரியும் நான் என்ன பண்ணேன் என்று, நீங்க என் வாழ்க்கையில் இனிமேல் தலையிடாதீர்கள் என கத்தி பேச, ரவீந்தரும் நீ என்கிட்ட இப்படி பேசாத என கோபத்தில் எகிறியதால் அவர்களை சக போட்டியாளர்கள் சமாதானப்படுத்தி வெளியே அழைத்து சென்றனர். இதனால் இன்று செம சம்பவம் இருக்கு என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்... பிக் பாஸ் டைட்டில் மிஸ் ஆனாலும், வெயிட்டான சம்பளத்துடன் எலிமினேட் ஆன தீபக்!