- Home
- Cinema
- மாமன் படத்துக்கு பப்ளிசிட்டி தேடிக் கொண்ட சூரி – பஞ்சமி மகன்களுக்கு காது குத்தும் விழாவிற்கு இது தான் காரணமா?
மாமன் படத்துக்கு பப்ளிசிட்டி தேடிக் கொண்ட சூரி – பஞ்சமி மகன்களுக்கு காது குத்தும் விழாவிற்கு இது தான் காரணமா?
Soori attend DJD Panchami Son Ear Piercing Ceremony : சூரி நடிப்பில் வெளியான மாமன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரியாலிட்டி ஷோவின் டான்ஸரான பஞ்சமியின் மகன்களுக்கு காது குத்தும் விழா சிறப்பாக நடந்துள்ளது.

சூரி
Soori attend DJD Panchami Son Ear Piercing Ceremony : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் நடிகர் சூரி. தன்னை ஒரு காமெடியனாக அறிமுகம் செய்த நிலையில் இப்போது தன்னை ஒரு மாஸ் ஹீரோவாக காட்டிக் கொண்டுள்ளார். ஒரு காலத்தில் கவுண்டமணி, விவேக் செய்ததை இப்போது சூரி மற்றும் யோகி பாபு போன்ற காமெடி நடிகர்கள் செய்து வருகின்றனர். விடுதலை படம் மூலமாக ஹீரோவான சூரிக்கு அடுத்தடுத்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தன.
மாமன் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்
அந்த வகையில் சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் மாமன் படமும் அந்த பட்டியலில் இணைந்துவிட்டது. மிகவும் எளிமையான கதை. எல்லோரது வாழ்விலும் ஒன்றிணைந்த ஒரு கதையை தேர்வு செய்து அந்த கதையில் தன்னையும் ஒரு பகுதியாக காட்டி ஹிட் கொடுத்துள்ளார். விலங்கு வெப் சிரீஸ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி, பாபா பாஸ்கர், சுவாஸிகா, ஐஸ்வர்யா லெட்சுமி, ராஜ்கிரண் ஆகியோர் பலர் நடிப்பில் உருவான படம் தான் மாமன்.
மாமன் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
முழுக்க முழுக்க குடும்ப கதையை மையப்படுத்திய இந்தப் படத்திற்கு ஹேஷம் அப்துல் வாகாப் இசையமைத்திருந்தார். லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் கே குமார் இந்தப் படத்தை தயாரித்திருந்தார். கடந்த 16ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படம் தற்போது வரையில் ரூ.20 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்திருக்கிறது.
டான்ஸ் ஜோடி டான்ஸ் பஞ்சமி மகன்கள்
இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் சூரி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கர்ச்சிராயபாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பஞ்சமி என்ற போட்டியாளர் கலந்து கொண்டு தனது டான்ஸ் திறமையை வெளிக்காட்டி வருகிறார். இந்நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான அவர் வரலட்சுமியின் மூலமாக சரத்குமாரையும் சந்தித்து அவரது வீட்டிற்கு சென்றும் விருந்தும் சாப்பிட்டுள்ளார்.
பஞ்சமி மகன்கள் காது குத்தும் விழா
பஞ்சமியின் மகன்களுக்கு படிப்பு செலவுக்கு சரத்குமார் பண உதவியும் செய்திருந்தார். இந்த நிலையில் தான் மாமன் பட புரோமோஷன் நிகழ்ச்சிக்காக சூரி டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற ரியாலிட்டி ஷோவிற்கும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பஞ்சமியின் 3 மகன்களுக்கும் இதுவரையில் மொட்டை போட்டு காது குத்தவில்லை என்பதை அறிந்த சூரி உங்களுக்கு அண்ணனாக, உங்களது மகன்களுக்கு ஒரு மாமனாக இருந்து மூவருக்கும் மொட்டை போட்டு காது குத்திடுவோம் என்று வாக்கு கொடுத்திருந்தார்.
சூரியின் மாமன் பாக்ஸ் ஆபிஸ்
அதன்படி சென்னை அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியிலுள்ள சந்தவேலூர் என்ற ஊரில் உள்ள கோயிலில் பொதுமக்கள் மத்தியில் கிடா விருந்துடன் காது குத்தும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. சூரி சொன்னது போன்று பஞ்சமியின் 3 மகன்களான அசோகமித்ரன், ஆதித்யவர்மா, தர்ஷித் ஆகியோருக்கு மொட்டை போட்டு காது குத்தும் விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்துள்ளார்.
மாமன் சூரி மற்றும் பஞ்சமி
இந்த நிலையில் சூரி தனது மாமன் பப்ளிசிட்டிக்காக தன்னை ரசிகர்களிடையே ஆக்டிவாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக இப்படியொரு டிராமாவை நடத்தியிருக்கிறார் என்று நெட்டிசன்கள் விமர்சித்தாலும் பலரும் சூரியின் இந்த செயலுக்கு அவருக்கு பல தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.