Nathai soori Health Benefits: ஆண்கள் ஏன் நத்தை சூரி சாப்பிட வேண்டும்?
நத்தை சூரி என்ற இந்த அரிய வகை மூலிகை பலவித நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் பாஸ்பரஸ், கால்சியம் போன்ற தாதுக்கள் அதிகம் உள்ளதால் எலும்பு சார்ந்த நோய்களுக்கு சிறந்தது. உடல் சூட்டை தணிக்கவும் இது உதவுகிறது.
nathai soori
நத்தை சூரி என்றால் ஏதோ கடல் உயிரினம் என்று நினைத்து விடாதீர்கள். இது அரிய வகை மூலிகையாகும். இதன் பெயர் மட்டும் வித்தியாசமானது இல்லை. இது கொடுக்கும் நன்மைகளும் ரொம்பவே வித்தியாசமானது. இது பல வித நோய்களை போக்கும் தன்மை உடையது. நத்தை சூரி மூலிகையில் பாஸ்பரஸ், கால்சியம் போன்ற தாதுக்கள் அதிகம் காணப்படுகின்றன. எலும்பு சார்ந்த நோய்களை விரட்டியடிக்க சித்த மருத்துவத்தில் நத்தை சூரி மூலிகையை தான் பரிந்துரைப்பார்கள். குறிப்பாக உடலின் சூட்டை மொத்தமாக குறைக்க நத்தை சூரியை எடுத்து கொள்ளலாம்.
breast milk
தாய்ப்பால் சுரப்பு
பிரசவித்த தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்க நத்தை சூரி மூலிகை உதவுகிறது. இதற்கு நத்தை சூரி மூலிகையின் வேரை 10 கிராம் எடுத்து பொடி செய்து பாலில் கலந்து கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இதனால் தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.
Body Heat
உடல் சூட்டை தணிக்கும் நத்தை சூரி
உடலில் இருக்கும் வெப்பத்தை தணிக்க நத்தை சூரியை பயன்படுத்தலாம். நத்தை சூரி மூலிகையின் விதைகளை கொஞ்சம் வறுத்து பொடி செய்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பாலில் கலந்து கொள்ளுங்கள். கொஞ்சம் பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை இருவேளைகள் குடித்தால் உடல் சூடு தணியும்.
Nathai Soori Health Benefits
உடல் பருமன்
நத்தை சூரி விதைகளை பொன்னிறமாக வறுத்து பொடி செய்து நீரில் கலந்து காய்ச்சி அத்துடன் பால் சேர்த்து காலை, மாலை ஆகிய இரு வேலைகளிலும் குடித்து வந்தால் கொலஸ்ட்ரால் குறையும். உடலில் கெட்ட கொழுப்பு தங்க விடாது.
Stomach Pain
வயிற்று கோளாறு
நத்தை சூரி விதை பொடி கலந்த பால் உடல் கழிவுகளை நீக்கும். சிறுநீரகக் கல்லை வெளியேற்றும், இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
Sperm Count
ஆண்மை அதிகரிக்கும்
நத்தை சூரி மூலிகையுடைய விதையை அரைத்து கொள்ளுங்கள். இதை அரை நெல்லிக்காய் அளவில் எடுத்து கொண்டு இதனை ஒரு டம்ளர் பாலில் நாள்தோறும் இருவேளை பருகினால் உடல் வலுவாகும். ஆண்மையும் அதிகரிக்கும்.