ஒரு வழியாக 'விடுதலை' படத்தின் படப்பிடிப்பை முடித்த வெற்றிமாறன்!
நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்தை இயக்கி வந்த நிலையில், ஒரு வழியாக இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடித்துள்ளார்.
ஜெகன்மோகன் எழுதிய 'துணைவன்' என்ற நாவலை மையமாக வைத்து விடுதலை என்ற பெயரில் இயக்குனர் வெற்றிமாறன், காமெடி நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து இயக்கி வந்த திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதலில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க இருந்த நிலையில், பின்னர் இந்த படத்தை இரண்டு பாகமாக வெற்றிமாறன் எடுக்க திட்டமிட்டதால் விஜய் சேதுபதியின் கதாபாத்திரமும் முதன்மை கதாபாத்திரமாக மாறியது.
சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்டு வந்த நிலையில், ஒரு வழியாக இன்று படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக ரெட் ஜெயின் மூவிஸ் நிறுவனம் படப்பிடிப்பு குழுவினரின், புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கையில் கன்னோடு... மாஸ் காட்டும் அஜித்! ட்விஸ்ட் வைத்த படக்குழு.. தீயாக பரவும் கேரக்டர் பெயர்!
சூரி - விஜய் சேதுபதியை தொடர்ந்து மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் கௌதமேனனும் இப்படத்தில் நடித்துள்ளார். சூரி போலீஸ் அதிகாரியாகவும், கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்திற்காக சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அவர் கடின உடற்பயிற்சிகள் மேற்கொண்டு, சிக்ஸ் பேக் தோற்றத்திற்கு மாறினார்.
'விடுதலை' படத்தின் முதல் பாகம் முடிவடைந்து, போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பையும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் படக்குழு படமாக்கி முடித்துள்ளது. இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், இளையராஜா இசையமைத்துள்ளார்.ஆர். எஸ்.இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை. ரெட் ஜெயின் மூவிஸ் வழங்குகிறது.
2022 ஆம் ஆண்டு இல்லத்தரசிகள் மனம் கவர்ந்து TRP-யில் டாப் 10 இடத்தை சீரியல்கள் பற்றிய தகவல்!
தற்போது வெற்றிமாறன் பல நாட்களாக படப்பிடிப்பில் இருந்த 'விடுதலை' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள நிலையில், அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து இயக்க உள்ள வாடிவாசல் படத்தில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.