கையில் கன்னோடு... மாஸ் காட்டும் அஜித்! ட்விஸ்ட் வைத்த படக்குழு.. தீயாக பரவும் கேரக்டர் பெயர்!
'துணிவு' படத்தில் நடித்துள்ள முக்கிய நடிகர்களின் கேரக்டர் லுக் மற்றும் கதாபாத்திரத்தில் பெயரை படக்குழு வெளியிட்ட நிலையில், அஜித் கதாபாத்திரத்தின் பெயரை வெளியிடாத நிலையில்... அஜித்தின் கதாபாத்திரத்தின் பெயர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் எச்.வினோத் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் கூட்டணியுடன் மூன்றாவது முறையாக அஜித் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'துணிவு'. வலிமை படத்திற்கு பின்னர் அஜித் மற்றும் வினோத் கூட்டணி இணையும் என்று அவர்களே எதிர்பார்க்காத நிலையில், எதார்த்தமாக வினோத் தன்னுடைய அடுத்த படத்தின் கதை குறித்து அஜித்திடம் கூறியபோது.. இந்த படத்தில் நானே நடிக்கிறேன் என அஜித் இன்ப அதிர்ச்சி கொடுத்ததாக இயக்குனர் ஹச் வினோத் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
எனவே இந்த படத்தின் பட்ஜெட் மிகவும் குறைவானதாகவே முதலில் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அஜித் நடிப்பதால் பிக் பட்ஜெட் மூவியாக மாறியது என்றும் கூறினார். பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இந்த படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்யும் விதமாக படக்குழுவினர் தீவிர பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை மூன்று சிங்கிள் பாடல்களை பட குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில்... விரைவில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வெளியாக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் அதற்கு முன்னதாக டீசர் குறித்த தகவலும் வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இன்று 'துணிவு' படம் குறித்து வெளியிட்ட தகவலில், இந்த படத்தில் மஞ்சு வாரியர் - கண்மணி என்கிற கதாபாத்திரத்திலும், சமுத்திரகனி - தயாளன் என்கிற கதாபாத்திரத்திலும், அஜய் - ராமச்சந்திரன் என்கிற போலீஸ் அதிகாரியாகவும், ஜிஎம் சுந்தர் - முத்தழகன் என்கிற வங்கி அதிகாரியாகவும், வீரா- ராதா என்கிற கதாபாத்திரத்திலும், ஜான் கோகென் - க்ரிஷ் என்கிற கதாபாத்திரத்திலும், பக்ஸ் - ராஜேஷ் என்கிற போலீஸ் அதிகாரியாகவும், பிரேம் - பிரேம் என்ற பெயரிலேயே நடித்துள்ளதாகவும், மோகனசுந்தரம் - மைஃபா என்கிற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அடுத்தடுத்து இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்களின் போஸ்டர் மற்றும் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியானதால், அஜித்தின் கதாபாத்திரம் குறித்தும் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட குழுவினர் அஜித் கையில் கன் வைத்துக் கொண்டிருக்கும் கெத்தான போஸ்டரை மட்டுமே வெளியிட்டு... அஜித்தின் கதாபாத்திரம் குறித்த பெயரை தெரிவிக்காமல் ட்விஸ்ட் வைத்தனர். மேலும் விரைவில் 'துணிவு' படத்தின் ட்ரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
அடுத்தடுத்து இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்களின் போஸ்டர் மற்றும் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியானதால், அஜித்தின் கதாபாத்திரம் குறித்தும் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட குழுவினர் அஜித் கையில் கன் வைத்துக் கொண்டிருக்கும் கெத்தான போஸ்டரை மட்டுமே வெளியிட்டு... அஜித்தின் கதாபாத்திரம் குறித்த பெயரை தெரிவிக்காமல் ட்விஸ்ட் வைத்தனர். மேலும் விரைவில் 'துணிவு' படத்தின் ட்ரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
படக்குழுவினர் அஜித் கேரக்ட்டர் பெயரை வெளியிடவில்லை என்றாலும், சமூக வலைத்தளத்தில் அஜித்தின் கேரக்டர் பெயர் ஆன்டனி என கூறி ஒரு தகவல் வைரலாகி வருகிறது.