2022 ஆம் ஆண்டு இல்லத்தரசிகள் மனம் கவர்ந்து TRP-யில் டாப் 10 இடத்தை சீரியல்கள் பற்றிய தகவல்!
2022 ஆம் ஆண்டு, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி... இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்ற டாப் 10 சீரியல்கள் பற்றிய தொகுப்பு இதோ...
வித்தியாசமான குடும்ப சென்டிமெண்டுடனும்... பல்வேறு ட்விஸ்டுகளுடனும் பல சீரியல் ஒளிபரப்பானாலும் ஒரு சில சீரியல்கள் மட்டுமே... அனைத்து தரப்பு ரசிகர்கள் மனதையும் கவர்ந்து, டி.ஆர்.பி-யில் கெத்து காட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது டாப் 10 இடத்தை பிடித்துள்ள, சீரியல்கள் குறித்த தகவல்கள் இதோ...
கயல் - சன் டிவி:
சன் டிவி தொலைக்காட்சியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' சீரியல் தான் 2022 ஆம் ஆண்டில் முதல் இடத்தில் உள்ளது. இதில் நாயகியாக சைத்ரா ரெட்டியும், கதாநாயகனாக ஆல்யா மான்ஸாவின் கணவர் சஞ்சீவ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். எந்த கஷ்டம் வந்தாலும், தன்னுடைய குடும்பத்தை பழிவாங்க துடிக்கும், பெரியப்பா குடும்பத்திடம் கையேந்திவிட கூடாது... அடிபணிய கூடாது என ஒவ்வொரு நாளும் போராடும் நாயகியாக 'கயல்' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த சீரியல் தான் இந்த ஆண்டில் டி.ஆர்.பி-யில் முதல் இடத்தை பிடித்துள்ளது
Sembi Review: கோவை சரளா 'செம்பி'யாக ரசிகர்கள் மனதை ஜெயித்தாரா? ட்விட்டர் விமர்சனம்!
sundhari
சுந்தரி - சன் டிவி:
இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளது, கேபிரியல்லா நடித்து வரும் 'சுந்தரி' சீரியல் தான். கிராமத்தில் பிறந்து வளரும் சுந்தரி, கலெக்டராக போராடி வருவதும், தன்னை பிடிக்காத ஒருவரை திருமணம் செய்து கொண்ட, கணவர் இன்னொரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டுள்ளார் என தெரிந்ததும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளும்.... கணவரின் சுய ரூபம் யாருக்கும் தெரியாமல் எப்படியெல்லாம் சுந்தரி சமாளிக்கிறார் என்பதை எதார்த்தமாக கூறிவரும் சீரியல் சுந்தரி.
வானத்தை போல - சன் டிவி:
டி.ஆர்.பி ரேட்டிங்கில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள சீரியல் சன் டிவி தொலைக்காட்சியில்... அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகி வரும் 'வானத்தை போல' சீரியல் தான். சமீபத்தில் இந்த சீரியலில் முதலில் அண்ணன் - தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர்கள் மாற்றப்பட்டாலும்... ரேட்டிங்கில் எந்த பின்னடைவும் இல்லாமல் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கணவர் விக்னேஷ் சிவனுக்கு உருகி... உருகி... நன்றி கூறி அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!
பாரதிகண்ணம்மா - ஸ்டார் விஜய்:
முதல் மூன்று இடங்களை, சன் டிவி சீரியல்கள் தனதாக்கி கொண்டாலும்...4வது இடத்தில் உள்ளது... விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியல். எப்போது பாரதி கண்ணம்மாவை ஏற்றுக்கொள்வார் என ரசிகர்கள் முதலில் எதிர்பார்த்த நிலையில்... தற்போது கண்ணம்மா எப்போது பாரதியை ஏற்றுக்கொள்வர் என்கிற எதிர்பார்ப்புடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
ரோஜா - சன் டிவி:
சமீபத்தில் சன் டிவியில் முடிவுக்கு வந்த ரோஜா சீரியல்... கடந்த 3 வருடங்களுக்கு மேலாக... தொடர்ந்து மற்ற சீரியல்களுக்கு ரேட்டிங்கில் டஃப் கொடுத்து வந்தது. சீரியல் முடிவடைந்தாலும் ஒவ்வொரு வாரமும் அதிகப்படியான ரேட்டிங்குடன், இந்த ஆண்டில் 5 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
எதிர்நீச்சல் - சன் டிவி:
ஆணாதிக்கத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் 'எதிர் நீச்சல்' சீரியல் நாளுக்கு நாள்.. மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமூக நோக்கம் கொண்ட ஒரு பெண் ஆணாதிக்கம் நிறைந்த குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டு வர, அங்கு பெண்களுக்கு எதிராக இருக்கும் பிரச்சனைகளை எதிர்க்கிறார். இதனால் வீட்டை விட்டே வெளியேற்றப்பட்ட நிலையில், மீண்டும் அப்பத்தாவின் உதவியோடு உள்ளே நுழைந்து... தன்னை போல் அந்த வீட்டில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் மற்ற மருமகள்களும் காப்பாற்றா எடுக்கும் முயற்சியே இந்த சீரியல்... இந்த சீரியல் இந்த வருட டி.ஆர்.பி தரவரிசை பட்டியலில் 6 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
கண்ணான கண்ணே - சன் டிவி:
சிறு வயதில் இருந்தே அப்பாவால் புறக்கணிக்கப்படும் மகளை, அவருடைய தந்தை ஏற்றுக்கொள்கிறாரா? என்பதையும் தன்னுடைய தந்தைக்கு வரும் பிரச்சனைகளை ஒரு மகளாக எப்படி தோல் கொடுத்து, நிற்கிறார் என்று அழகிய பாச கதையை கூறும் இந்த சீரியல் தான் இந்த ஆண்டு டி.ஆர்.பி ரேட்டிங்கில்... 7 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
பாக்கியலட்சுமி - ஸ்டார் விஜய்:
ஒரு பெண் நினைத்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்று வெளிப்படுத்தும் விதமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'பாக்கியலட்சுமி'. விருப்பம் இல்லாத பெண்ணை திருமணம் செய்து கொண்டு, அவளை அடிமை போல் நடத்தும், அவருடைய கணவரிடம் இருந்து பிரிந்து... வீட்டில் இருக்கும் பெண்களாலும், தொழில் ரீதியாக சாதிக்க முடியும் என்பதை எடுத்து கூறும் விதமாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் 8 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
ஆனந்த ராகம் - சன் டிவி:
கடந்த 6 மாதங்களுக்கு முன் சன் டிவியில் புதிதாக துவங்கப்பட்ட சீரியல் 'ஆனந்த ராகம்'. ஐபிஎஸ் அதிகாரியாக மாற வேண்டும் என்கிற ஆசையில் இருக்கும் கதாநாயகி ஈஸ்வரியின் வாழ்க்கை, திடீர் என நிகழும் பெற்றோர் மரணத்தால் எப்படி திசை மாறி போகிறது? என்பதையும்... ஈஸ்வரி கடைசியில் ஐ.பி.எஸ் அதிகாரியாக மாறி தன்னுடைய தந்தையின் ஆசையை நிறைவேற்றுவாரா? என்கிற எதிர்பார்ப்புடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் - ஸ்டார் டிவி:
அண்ணன் - தம்பிகள் பாசத்தை அடிப்படையாக வைத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டி .ஆர்.பி-யில் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்துள்ளது என்று தான் கூற வேண்டும், கடந்த ஆண்டு டாப் 3 ரேட்டிங்கில் இருந்த இந்த சீரியல் தற்போது... 10 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.