கணவர் விக்னேஷ் சிவனுக்கு உருகி... உருகி... நன்றி கூறி அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

நடிகை நயன்தாரா, சமீபத்து நடித்து வெளியான 'கனெக்ட்' படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உருகி உருகி நன்றி கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 

Connect movie Actress nayanthara thanking statement released

லேடி சூப்பர் ஸ்டார், என தமிழ் திரையுலக  ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா, தொடர்ந்து ரசிகர்களை கவரும் விதமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், தன்னுடைய காதல் கணவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா ஆகியோருடன் இணைந்து நடித்து, இந்த வருட துவக்கத்தில் வெளியான 'காத்து வாக்குல ரெண்டு காதல்'  திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து 5 வயது குழந்தைக்கு அம்மாவாக 'ஒ2' படத்தில் நடித்திருந்தார் நயன்தாரா. இந்த படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில். நயன் நடிப்பில்... அவருடைய காதல் கணவர் விக்னேஷ் சிவன், தயாரிப்பில் கடந்த வாரம் வெளியான  ஹாரர்  படமான 'கனெக்ட்' இரண்டாவது வாரத்திலும் பல திரையரங்கங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Connect movie Actress nayanthara thanking statement released

'துணிவு' படத்தில் நடித்துள்ள முக்கிய நடிகர்கள் ஃபர்ஸ்ட் லுக்கை அடுத்தடுத்து வெளியிட்டு வரும் படக்குழு!

இந்நிலையில் 'கனெக்ட்'  தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் நடிகை நயன்தாரா நன்றி தெரிவிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் நடிகை நயன்தாரா கூறியுள்ளதாவது... ' இந்த ஆண்டு எனக்கு ஒரு நிறைவான ஆண்டாகும்'. கனெக்ட் படத்தை பார்த்து ஆதரவளித்த திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. தொடர்ந்து நீங்கள் டிக்கெட் முன் பதிவு செய்து படத்தை ரசித்து வருவதற்கு நன்றி.

Connect movie Actress nayanthara thanking statement released

எங்களால் முடிந்தவரை ரசிகர்கள் மனதை நிறைவு செய்ய முயற்சித்துள்ளோம். எங்கள் படக்குழு அனைவருமே நம்பிக்கையுடனும், நேர்மையுடனும் பணியாற்றியுள்ளோம். இந்த படத்தின் இயக்குனரான அஸ்வின் சரவணன் என்னை நம்பியதற்கு நன்றி. உலகம் தரம் வாய்ந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் நானும் இருக்கிறேன் என்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எனது அன்பு நிறைந்த தயாரிப்பாளரான விக்னேஷ் சிவனுக்கு நன்றி. இந்த திரைப்படத்தையும், குழுவையும், நம்பி படத்தை சிறந்த முறையில் தயாரித்து, விநியோகம் செய்ததற்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறிக் கொள்கிறேன்.

Sembi Review: கோவை சரளா 'செம்பி'யாக ரசிகர்கள் மனதை ஜெயித்தாரா? ட்விட்டர் விமர்சனம்!

Connect movie Actress nayanthara thanking statement released

உங்கள் அன்பு, ஆதரவு, கருத்து, மற்றும் விமர்சனங்கள், அனைத்தையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு இதை ஒரு பாடமாக இருக்கும் என நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும், உங்களின்  நிபந்தனையற்ற அன்புக்கும் நன்றி கூறிக்கொண்டு புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் நயன்தாரா.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios