MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'துணிவு' படத்தில் நடித்துள்ள முக்கிய நடிகர்கள் ஃபர்ஸ்ட் லுக்கை அடுத்தடுத்து வெளியிட்டு வரும் படக்குழு!

'துணிவு' படத்தில் நடித்துள்ள முக்கிய நடிகர்கள் ஃபர்ஸ்ட் லுக்கை அடுத்தடுத்து வெளியிட்டு வரும் படக்குழு!

'துணிவு' திரைப்படத்தின், ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால்... அவ்வப்போது படத்தின் முக்கிய தகவலை வெளியிட்டு வரும் படக்குழு, தற்போது  நடிகர்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Dec 30 2022, 08:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

நடிகர் அஜித், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம்... 'துணிவு'. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் புரமோஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது. உலக அளவில் உள்ள அஜித் ரசிகர்களும், இந்த படத்தின் ரிலீஸுக்காக கார்த்திருக்கின்றனர். 
 

210

இதே நாளில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' திரைப்படமும் வெளியாக உள்ள நிலையில்... ரசிகர்களை தாண்டி, தயாரிப்பாளர்களே... விஜய் தான் அஜித்தை விட பெரிய நடிகர், எனவே அவருடைய படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட வேண்டும் என கூறி வருவது, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

310

மேலும் இரண்டு படக்குழுவினருமே... படத்தை புரமோட் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். விஜய்யின் போஸ்டரை 'வாரிசு' படக்குழு ரயில் போன்றவற்றில் ஒட்டி விளம்பர படுத்தினால்... அஜித்தின் துணிவு படக்குழு ஒரு படி மேலே சென்று.... ஆகாயத்தில், ஸ்கை டைவிங் செய்து விளம்பரப்படுத்தியது... திரையுலகினரையே ஆச்சரியப்படுத்தியது.

410

இந்நிலையில் இன்று, 'துணிவு' படத்தில் இருந்து முக்கிய தகவல்கள் வெளியாகும் என, படக்குழு அறிவித்திருந்த நிலையில், இப்படத்தில் நடித்துள்ள முக்கிய நடிகர்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது.

510

அந்த வகையில் இதுவரை மொத்தம் 5 நடிகர்களின் போஸ்டர்கள் வெளியாகி உள்ளது. நடிகர் வீரா 'ராதா' என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜான் கோகென் 'க்ரிஷ்' என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

610

நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம், 96, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள பக்ஸ் 'துணிவு' படத்தில் ராஜேஷ் என்கிற போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். நடிகர் பிரேம்... பிரேம் என்கிற கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளார். நடிகர் மோஹன சுந்தரம் மைபா என்கிற கேரக்டரில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

710

மேலும் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் கலக்கி வரும் சமுத்திரகனி, தயாளன் என்கிற போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.

810

பல தெலுங்கு, மற்றும் தமிழ் படங்களில் வில்லான் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அஜய், ராமச்சந்திரன் என்கிற போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.

910

சி.எம்.சுந்தரம், துணிவு படத்தில்... முத்தழகன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடைய தோற்றத்தை வைத்து பார்க்கையில்... அஜித் கொள்ளையடிக்க போகும், பேங்கில் வேலை செய்பவர் என்பது இவரின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்தால் தெரிகிறது. இந்த படத்தில் நடித்து வரும் பிரபலங்களின் தோற்றம் வெளியாகி வரும் நிலையில், விரைவில் அஜித்தின் பெயரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

1010

நடிகர் மஞ்சு வாரியார், கண்மணி என்கிற கதாபாத்திரத்தில் துணிவு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்து வரும் பிரபலங்களின் தோற்றம் வெளியாகி வரும் நிலையில், விரைவில் அஜித்தின் பெயரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
என் மார்பில் அடிச்சுட்டு ஓடிட்டான்... கசப்பான அனுபவங்களை பகிர்ந்த நடிகை பார்வதி
Recommended image2
கோல்டன் குளோப் விருதுகள் அறிவிப்பு... அதிக விருதுகளை தட்டிதூக்கியது யார்? வின்னர்ஸ் லிஸ்ட் இதோ
Recommended image3
Music: இளமையெனும் பூங்காற்று பாடலில் இவ்வளவு அதிசயங்கள் இருக்கா.! இளையராஜா புதைத்து வைத்த இசை ரகசியம் இதுதான்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved