சோபிதா இடத்தில் வைக்கப்பட்ட நாய்; அக்கினேனி மருமகளுக்கு நேர்ந்த அவமானம்!
அக்கினேனி நாகர்ஜுனா, குடும்பத்தின் புது மருகமைகளான சோபிதா வாய்ப்பு தேடிய காலங்களில் தனக்கு நேர்ந்த அவமரியாதை குறித்து, ஒரு பேட்டியில் வேதனையோடு பேசியுள்ளார். இந்த தகவல் வைரலாகி வருகிறது.
Samantha Ex Husband Girl Friend Sobhita
திரையுலகில் பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டாலே அது ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்பட்ட செய்தியாக மாறிவிடும். அந்த வகையில், பிரபல நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யாவை காதலித்து, அவருக்கு இரண்டாவது மனைவியாக மாறியுள்ளார் சோபிதா துலிபாலா. இவர்களுடைய திருமணம் டிசம்பர் 4-ஆம் தேதி நடந்த நிலையில், இவர்களுடைய திருமணம் குறித்தும், அவர்களை பற்றிய பழைய தகவல்களும் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
Sobhita Weds Nagarjuna son Naga Chaitanya
அக்கினேனி குடும்பத்தில் இணைந்துள்ள நடிகை சோபிதா துலிபாலா, குண்டூர் மாவட்டம் தெனாலியில் பிறந்தவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவருடைய தந்தை ஒரு வணிக கடற்படை பொறியாளர் மற்றும் இவரின் அம்மா ஒரு பள்ளி ஆசிரியை. மாடலிங் துறையில் சோபிதாவுக்கு ஆர்வம் இருந்தாலும், படிப்பிலும் படு சுட்டி.
விவாகரத்து வதந்தி; ஒரே நாளில் முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன்!
Sobhita Education
விசாகப்பட்டினத்தில் தனது பள்ளிப் படிப்பை முடித்த சோபிதா, கார்ப்பரேட் சட்டத்தில் இளங்கலை பட்ட படிப்பை முடித்த பின்னர், மும்பை பல்கலைக்கழகத்தில் ஹெச்.ஆர்., பிசினஸ் மற்றும் எகனாமிக்ஸ் படிப்பை முடித்தார். மேலும் சிறு வயதில் இருந்தே நடனத்தில் இவருக்கு ஆர்வம் இருந்ததால், பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி கற்றார்.
Sobhita Family Details
2010 இல், கடற்படை அழகி போட்டியில் கலந்து கொண்டு கடற்படை ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவே இவர் மாடலிங் துறையை தேர்வு செய்ய காரணமாக அமைந்த நிலையில், மும்பைக்கு வந்து மாடலிங்கில் கவனம் செலுத்திக்கொண்டே பட வாய்ப்புகளை தேட துவங்கினார்.
பாகுபலி முதல் KGF வரை எல்லாமே அவுட்! இரண்டே நாளில் வெறித்தன வசூல் வேட்டையாடிய 'புஷ்பா 2'!
Ponniyin Selvan Movie Actress
‘ராமன் ராகவ் 2.0’ படத்தின் மூலம் பாலிவுட் நடிகையாக மாறினார். அடுத்தடுத்து தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் வெப் சீரிஸ்களின் ராணியாக பார்க்கப்படும் சோபிதா, பல வெப் தொடர்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
Sobhita Dulipala Modeling Carrier
புது பெண்ணாக மாறியுள்ள நடிகை சோபிதா மாடலிங் வாய்ப்பு தேடிய போது தனக்கு நடந்த அவமரியாதை குறித்து தன்னுடைய பழைய பகிர்ந்து கொண்டுள்ளார். "ஒருமுறை மாடலிங் ஆடிஷனுக்குப் போனபோது கேமரா ரிப்பேர் ஆகிவிட்டதாக கூறி சோபிதாவை மறுநாள் வரும்படி கூறியுள்ளனர். பின்னர் சோபிதாவின் இடத்தில ஒரு நாயை வைத்து படம்பிடித்துள்ளனர்.
ஷாருக்கானையே மிஞ்சிய அல்லு அர்ஜுன்! பாலிவுட் பாக்ஸ் ஆபிசை பதம்பார்த்த புஷ்பா 2!
Dog Replace in Sobhita
ஆனால் சோபிதா ஹீரோயினாக மாறிய பின்னர், அதே விளம்பரத்திற்காக ஐஸ்வர்யா ராயுடன் நடித்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து உருக்கமாக பேசிய சோபிதா, வாய்ப்பு கொடுக்காமல் இருந்தால் கூட இதை நான் பெரிதாக எடுத்திருக்க மாட்டேன். ஆனால் தனக்கு பதிலாக நாயை வைத்து எடுப்பது என்பது மிகப்பெரிய அவமானமாக உணர்தேன் என தெரிவித்தார். இந்த தகவல் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் பேசும்பொருளாக மாறியுள்ளது.