பாகுபலி முதல் KGF வரை எல்லாமே அவுட்! இரண்டே நாளில் வெறித்தன வசூல் வேட்டையாடிய 'புஷ்பா 2'!
முதல் நாளே ரூ.294 கோடி வசூல் செய்த நிலையில், இரண்டாவது நாளில் இந்த படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Pushpa 2 Beat Bahubali and RRR Collection
முதல் நாளே பிக் ஓப்பனிங் கண்ட படங்களாக பார்க்கப்பட்ட பாகுபலி, RRR, கல்கி, மற்றும் KGF படங்களில் வசூலை விட அதிகம் வசூல் செய்து இந்திய சினிமாவையே மிரள வைத்தது புஷ்பா 2 திரைப்படம்.
Allu Arjun And Sukumar Combo
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான 'புஷ்பா தி ரெய்ஸ்' திரைப்படத்தின் தொடர்ச்சியாகவே 'புஷ்பா தி ரூல்' திரைப்படம் வெளியானது. முதல் பாகத்தை எந்த இடத்தில் விட்டாரோ இயக்குனர் சுகுமார், அதே இடத்தில் இரண்டாம் பாக கதையை தொடங்கியது இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ்.
முதல் நாள் வசூலில் மிரள வைத்த அல்லு அர்ஜுன்! வெளியானது 'புஷ்பா 2' அதிகார பூர்வ தகவல்!
Allu Arjun Pushpa Got Some Negative Comments
ஃபர்ஸ்ட் ஆப் நன்றாக இருப்பதாகவும், செகென்ட் ஆப் வழக்கம் போல் நொண்டியடிக்க ஆரம்பித்து விட்டதாகவும், கூறி வருகின்றனர் ரசிகர்கள். 3 மணிநேரத்திற்கு மேல் இந்த படத்தை எடுக்க வேண்டிய அவசியமே இல்லை, அதற்கான ஸ்டப் இப்படத்தில் இல்லை என்பதும் பலரின் கருத்து. இது போல் சில நெகடிவ் விமர்சனங்கள் இந்த படத்திற்கு வந்த போதிலும், ஆக்ஷன், நடிப்பு, ஆட்டம் - பாட்டம் என படத்தை தன்னுடைய நடிப்பால் கவர் செய்து விட்டார் அல்லு அர்ஜுன்.
Pushpa 2 Day 2 Collection
அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு ஏற்ற மாஸ் மசாலா படமாக இந்த படம் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் முதல் நாளே, ரூ.294 கோடி வசூல் செய்ததாக புஷ்பா 2 படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்தது. மேலும் எந்த ஒரு விடுமுறை நாட்களிலும் வெளியாகாமல், திருவிழா சமயத்திலும் வெளியாகாமல் புஷ்பா 2 படத்திற்கு கிடைத்த இந்த வரவேற்பு பலரையும் பிரமிக்க வைத்தது.
காங்குவா தோல்வி எதிரொலி; திட்டமிடப்பட்ட தேதிக்கு முன்பே ஓடிடியில் ரிலீஸ்!
Pushpa collection Details
இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி இரண்டாவது நாளில், புஷ்பா 2 ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே இரண்டே நாட்களில் சுமார் 400 கோடி வசூலை புஷ்பா எட்டிவிட்டதாக பார்க்கப்படுகிறது. ஹிந்தியில் புஷ்பா 2 திரைப்படம் முதல் நாளை விட குறைவாக 52 கோடியும், தெலுங்கில் ரூ.30 கோடியும், தமிழகத்தில் ரூ.11 கோடியும், கேரளாவில் ரூ.6 கோடியும், கர்நாடகாவில் ரூ.20 கோடியும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Pushpa 2 Create Record in Box Office
அதே போல் இன்று மற்றும் நாளை விடுமுறை நாட்கள் என்பதால், புஷ்பா 2 படத்தின் வசூல் அதிகரிக்க கூடும் என திரையரங்கு உரிமையாளர்கள் கூறி உள்ளனர். இரண்டே நாளில் இமாலய வெற்றியை பதிவு செய்துள்ள புஷ்பா 2 திரைப்படத்தில், அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா நடித்திருந்த நிலையில், ஃபகத் பாசில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவரை தவிர அனுசுயா பரத்வாஜ், சுனில், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நைட்த்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடலும், காதலும்! வியக்க வைக்கும் அமலா பாலின் முதல் வெட்டிங் டே செலிபிரேஷன்